
சர்வதேச பொருளாதார காரணங்களால் ஆபரணத்தங்கம் மற்றும் வெள்ளியில் விலையில் ஏற்றம் காணப்படுகிறது. இந்தியாவில் புதன் கிழமை செண்டிமென்ட் வாடிக்கையாளர்களை நகைக்கடை பக்கம் அழைத்து சென்றதால் தேவை அதிகரித்து ஆபரணத்தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்றத்தை ஏற்படுத்தியது.
மூன்று நாட்களில் ரூ.1320 உயர்வு
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,090க்கு விற்பனை ஆகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 உயர்ந்துள்ளது.
சந்தையில் காணப்படும் ஏற்ற இறக்கம்
தங்கம் விலை ஏப்ரல் 22 ஆம் தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 15-ந் தேதி தங்கம் விலை மளமளவென சரிந்து ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. அதைத் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை கடந்த 2 நாட்களாக மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.71,360-க்கு விற்பனையாகி வந்தது.
இந்நிலையில், வார தொடக்க நாளான திங்களன்று காலையும், மாலையும் என இருவேளையும் தங்கம் விலை உயர்ந்தது. இதையடுத்து ஒரு சவரன் ரூ.72,480-க்கும் கிராம் ரூ.9,060-க்கும் விற்பனையானது. இதையடுத்து நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,080-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,640-க்கும் விற்பனையாகிறது.
இன்று இதுதான் விலை
இந்நிலையில், இன்று (ஜூன் 04) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.9,090க்கு விற்பனை ஆகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நீண்ட நாள்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட வெள்ளி விலை, நேற்று கிராமுக்கு ரூ. 2 அதிகரித்த நிலையில், இன்றும் கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 114 ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,14,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.