
New E Waste Policy : மின்னணு அல்லது மின்னணு உபகரணங்கள், கொண்ட கழிவுகள் மின் கழிவுகள் (இ வேஸ்ட்) ஆகும். இதில் மொபைல் போன்கள், ஏசி, பிரிட்ஜ், மைக்ரோவேவ், வாஷிங் மெஷின், டிவி, கம்யூட்டர் என்று எலக்ட்ரானிக் பொருட்கள் அடங்கும். இந்த பொருட்கள் பழுதடையும் போது நேரடியாக குப்பைத் தொட்டிகளில் தூக்கி வீசப்படுகின்றன. அப்படியில்லை என்றால் அவற்றிலுள்ள உலோகங்களுக்காக முறைசாரா முறையில் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
பொதுவாக மின் கழிவுகளில் சராசரியாக ஆண்டுதோறும் 22 சதவிகிதம் மட்டுமே முறையாக மறு சுழற்சி செய்யப்படுகிறது. முறைசாரா மின் கழிவு மறுசுழற்சியானது பொருளாதார தேவைக்காக மட்டுமே இயக்கப்படுகிறது. இவை பொதுவெளியில் மின் கழிவுகளை எரித்தல், புதைத்தல் அல்லது அமிலக் குளியல் போன்றவற்றை கொண்டுள்ளது. இந்த முறைசாரா மின் கழிவு மறுசுழற்சியானது அதிக நச்சுத்தன்மை கொண்ட உலோகங்கள் மற்றும் பிளாஸ்டிக்குகளை சுற்றுச்சூழலில் வெளியிடுகின்றன. இந்த முறைசாரா மின்-கழிவு மறுசுழற்சியானது பெரும்பாலும் தனிநபர்களுக்கு உடல் ரீதியிலான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.
மின்னணு கழிவு விதிமுறைகளின்படி, உருவாக்கப்படும் மின்னணு கழிவுகளை நிர்வகிக்கும் பொறுப்பு மின்சார மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கு உள்ளது. விற்பனை செய்யப்படும் மின் மற்றும் மின்னணு உபகரணங்களின் அளவைப் பொறுத்து நிறுவனங்களுக்கு மறுசுழற்சி இலக்குகள் ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
வோல்டாஸ், ஹிட்டாச்சி மற்றும் டைகின் போன்ற பெரிய பெரிய மின்னணி நிறுவனங்கள் அதிக செலவுகள் ஏற்படக் கூடும் என்ற பீதியில் புதிய மின் கழிவு மேலாண்மை விதிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. உலகின் 3ஆவது பெரிய மின் கழிவுகளை உருவாக்கும் நாடான இந்தியா, பல மின்னணு நிறுவனங்களின் சட்டரீதியான எதிர்ப்பை எதிர்கொள்கிறது.
இதற்கு முக்கிய காரணம் செலவுகள் 3 மடங்கு அதிகரிக்க கூடும் என்பது தான். இந்தியா ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 3.2 மில்லியன் டன் மின்னணு கழிவுகளை உருவாக்குகிறது. மின் கழிவு விதிமுறைகளின் படி மின் மற்றும் மின்னணு உபகரணங்களின் உற்பத்தியாளர்கள் தாங்கள் தயாரிக்கும் உபகரணங்களின் ஆயுட்காலத்தை நிர்வகிக்க வேண்டும். இதில் மறுசுழற்சியும் அடங்கும்.
இதில் மறு சுழற்சி செய்பவர்களுக்கு மின் பொருட்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு கிலோ ஒன்றிற்கு குறைந்தபட்ச அடிப்படை விலையாக ரூ.22 என்று கடந்த செப்டம்பர் மாதம் நிர்ணயித்தது. இதை எதிர்த்து தான் எல்ஜி மற்றும் சாம்சங் போன்ற மின்சாதன நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இதற்கு முக்கிய காரணமாக, மின் கழிவு கொள்கை காரணமாக உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யக் கூடிய செலவுகள் 3 மடங்கு அதிகரிக்க கூடும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.