
Rejected Visa Refund : ஒவ்வொரு ஜாம்பியன் விண்ணப்பத்தாரருக்கும் நிராகரிக்கப்பட்ட விசா கட்டணங்களை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து திரும்ப வழங்க வேண்டும் என்று ஜாம்பியன் அதிபர் ஹகைண்டே ஹிச்சிலேமா கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விசா கேட்டு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, நிராகரிக்கப்பவும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக செலவுகள் தான் அதிகரிக்கிறது. மேலும், விசா கேட்டு பல முறை விண்ணப்பிக்க வேண்டிய நிலையும் உருவாகிறது.
இது சுற்றுலா, கல்வி மற்றும் வணிகம் ஆகியவற்றிற்காக வெளிநாடுகளுக்கு பயணிக்க விரும்பும் ஜாம்பியன் நாட்டைச் சேர்ந்தவர்களை வெகுவாக பாதிக்கிறது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு மட்டுமே விசா கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று அவர் கோரினார். அதுமட்டுமின்றி நிராகரிக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்களுக்கு அவர்களுக்கான செலவை திரும்ப செலுத்திட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விசாவிற்காக விண்ணப்பிக்கும் போது விண்ணப்பக் கட்டணங்கள் குறைவாக இருக்கும் போது கூட அவர்களது கோரிக்கைகள் மறுக்கப்படும் போது திரும்ப திரும்ப விண்ணப்பிக்கும் நிலை உருவாகும் போது அவர்கள் செலவிடும் தொகையும் அதிகரிக்க கூடும். நிராகரிக்கப்படும் விண்ணப்பங்கள் மூலமாக ஜாம்பியன் குடிமக்கள் கணிசமான தொகையை இழப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் கூறினார். இதன் காரணமாக நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான பணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்பதற்காக அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால், விசா கட்டணத்தை திரும்ப பெறுவது குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு என்பது இங்கு தெளிவாக இல்லை. எனினும் கூட ஜாம்பியன் நாட்டு அதிபரின் நியாயமான கோரிக்கையானது மேலும் விவாதத்தை தூண்டக் கூடும். இதற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில் ஜாம்பியன் நாட்டு அதிபரின் கோரிக்கையானது ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.