தங்கம் விலை இன்று மளமளவெனச் சரிந்துள்ளது. கடந்த 3 நாட்களாக தங்கம் விலை ஊசலாட்டத்தில் இருந்தநிலையில் இன்று மீண்டும் சரிந்துள்ளது
தங்கம் விலை இன்று மளமளவெனச் சரிந்துள்ளது. கடந்த 3 நாட்களாக தங்கம் விலை ஊசலாட்டத்தில் இருந்தநிலையில் இன்று மீண்டும் சரிந்துள்ளது
தங்கம் விலை இன்று கிராமுக்கு 45ரூபாயும், சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,735 ஆகவும், சவரன், ரூ.37,880 ஆகவும் இருந்தது.
தங்கம் விலை மீண்டும் குறைவு! சவரனுக்கு ரூ.200 வீழ்ச்சி: இன்றைய நிலவரம் என்ன?
இந்நிலையில் சனிக்கிழமை (இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 45ரூபாய் குறைந்து, ரூ.4,690ஆக சரிந்துள்ளது. சவரனுக்கு ரூ.360 சரிந்து, ரூ.37,520ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,690ஆக விற்கப்படுகிறது.
தங்கம் விலை வாரம் தொடங்கியதிலிருந்து 3 நாட்கள் விலை குறைந்தது, அதன்பின் சற்று அதிகரித்தது, பின்னர் மீண்டும் சரிவை நோக்கியே இருந்து வருகிறது.
ஏற்ற, இறக்கத்தில் தங்கம் விலை! குழப்பத்தில் நகைப்பிரியர்கள்!: இன்றைய நிலவரம் என்ன?
இந்த வாரம் தொடங்கும் போது தங்கம் கிராம் ரூ.4775 ஆக இருந்தது, தற்போது ரூ.4,690 ஆக, கிராமுக்கு ரூ.85 குறைந்துள்ளது. சவரன் ரூ.38,200 ஆக இருந்த நிலையில் இன்று ரூ37,880ஆக விற்கப்படுகிறது. ஏறக்குறைய சவரனுக்கு கடந்த 5 நாட்களில் மட்டும், ரூ.320 குறைந்துள்ளது.
அமெரிக்காவில் அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இம்மாதம் 20ம்தேதி கூடும் பெடரல் ரிசர்வ் கூட்டத்தில் வட்டிவீதம் உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது. அமெரி்க்காவில் வட்டிவீதம் உயர்த்தப்படும்போது, டாலர் மதிப்பு வலுப்பெற்று உலக நாடுகளின் கரன்ஸிகளின் மதிப்பு சரியத் தொடங்கும். இது இந்திய ரூபாய் மதிப்புக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும், தங்கத்தின் தேவையை சர்வதேச அளவில் குறைக்கும்.
தங்கம் விலை தொடர் வீழ்ச்சி! 3 நாட்களில் சவரனுக்கு ரூ.640 சரிவு: இன்றைய நிலவரம் என்ன?
இதனால் வரும் வாரங்களில் அமெரிக்க பெடரல் வங்கியின் கூட்டம் தங்கம் விலையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
வெள்ளி விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் 80 பைசா குறைந்து, ரூ.60.50 ஆகவும், கிலோவுக்கு ரூ.18,000 சரிந்து, ரூ.60,500 ஆகவும் விற்கப்படுகிறது