தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.200க்கு மேல் அதிகரித்த நிலையில் அதைவிட இன்று அதிகமாகக் குறைந்துள்ளது நகைவாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.200க்கு மேல் அதிகரித்த நிலையில் அதைவிட இன்று அதிகமாகக் குறைந்துள்ளது நகைவாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 35 ரூபாயும், சவரனுக்கு 280 ரூபாயும் விலை குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.5,045ஆகவும், சவரன், ரூ.40,360ஆகவும் இருந்தது.
தங்கம் விலை கிடுகிடு உயர்வு! சவரனுக்கு ரூ.200க்கு மேல் ஏற்றம்: இன்றைய நிலவரம் என்ன?
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செவ்வாய்கிழமை) கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ரூ.5,010 ஆகவும், சவரனுக்கு 280 ரூபாய் சரிந்து ரூ.40 ஆயிரத்து 080ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,010க்கு விற்கப்படுகிறது.
அமெரிக்கப் பெடரல் வங்கி வட்டிவீதத்தை மேலும் உயர்த்தும் என்ற தகவல், அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை வரக்கூடும் என்ற தகவலால் ஆசியமற்றும் இந்தியப் பங்குச்சந்தைகள் காலை முதலே சரிந்துள்ளன.
என்னத்த குறைஞ்சு!தங்கம் விலை குறைந்தாலும் சவரன் ரூ.40ஆயிரத்துக்கு மேல்தான்! நிலவரம் என்ன?
இதனால், தங்கத்தின் மீதான முதலீட்டுப்பக்கம் ஆர்வம்காட்டிய முதலீட்டாளர்கள் மீண்டும் பங்குப்பத்திரங்கள் பக்கம் திரும்ப உள்ளனர். இதனால், தங்கத்தின் விலை திடீரென குறைந்துள்ளது.
கடந்த வாரத்தில்தங்கம், சவரனுக்கு 552 ரூபாய் உயர்ந்து ரூ.40ஆயிரத்துக்கு மேல் உயர்ந்தது. வாரத்தின் முதல்நாளான நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.232 அதிகரித்தது. ஆனால், இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்து ஏறக்குறைய 40 ஆயிரத்துக்கு கீழ் வர உள்ளது. இந்த விலைக் குறைவு நடுத்தரக் குடும்பத்தினருக்கும், தங்கம் வாங்க நினைப்போருக்கும் ஆறுதலாக அமைந்துள்ளது.
உச்சத்தில் தங்கம் விலை! சவரன் ரூ.40ஆயிரத்தைக் கடந்தது! நிலவரம் என்ன?
வெள்ளி விலையில் இன்று வீழ்ச்சி அடைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 1.70 பைசா குறைந்து, ரூ.70.80 ஆகவும், கிலோவுக்கு ரூ.1,700 சரிந்து, ரூ.70,800 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது