gold rate today: ஊசலாட்டத்தில் தங்கம் விலை! கணிக்க முடியாமல் நகைப்பிரியர்கள் தவிப்பு: இன்றைய நிலவரம் என்ன?

By Pothy RajFirst Published Sep 8, 2022, 10:17 AM IST
Highlights

தங்கம் விலை கடும் ஊசலாட்டத்தில் இருந்து வருகிறது. இரு நாட்களாக விலை சரிந்தநிலையில் இன்று சற்று விலை உயர்ந்துள்ளது.

தங்கம் விலை கடும் ஊசலாட்டத்தில் இருந்து வருகிறது. இரு நாட்களாக விலை சரிந்தநிலையில் இன்று சற்று விலை உயர்ந்துள்ளது.

தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது, சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.  

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய நிலவரப்படி கிராம் ரூ.4,725 ஆகவும், சவரன், ரூ.37,800 ஆகவும் இருந்தது. 

seat belt: காரின் பின்சீட்டில் அமர்பவருக்கும் சீட் பெல்ட் கட்டாயம்! : மத்திய அரசு விரைவில் அறிவிப்பு

இந்நிலையில் வியாழக்கிழமை(இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ.4,725ஆக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.37,840ஆக அதிகரித்துள்ளது. 

கோவை, திருச்சி, வேலூரில்  தங்கம் கிராம் ரூ.4,725ஆக விற்கப்படுகிறது.

தங்கம் விலை மீண்டும் ஊசலாட்டத்துக்கு நகர்ந்துள்ளது. கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் விலை அதிகரித்த நிலையில் நேற்று விலை குறைந்தது.  கடந்த திங்கள், செவ்வாய் கிழமைகளில் தங்கம்விலை கிராமுக்கு ரூ.28  சவரனுக்கு ரூ.224 உயர்ந்தது. ஆனால், நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.55 குறைந்தது, சவரனுக்கு ரூ.440 வீழ்ச்சி அடைந்தது. 

களையெடுப்பு ஆரம்பம்! அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக வருமான வரித்துறை ரெய்டு

இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 5ரூபாயும், சவரனுக்கு 80ரூபாயும் அதிகரித்துள்ளது.   

வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ஒரு 70 காசுகள் அதிகரித்து, ரூ.59.50ஆகவும், கிலோவுக்கு ரூ.700 அதிகரித்து ரூ.59,500 ஆகவும் உயர்ந்துள்ளது

click me!