
தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாகக் இன்றும் குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.350க்கும் அதிகமாகக் வீழ்ச்சி அடைந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.24 குறைந்துள்ளது, சவரனுக்கு ரூ.192 சரிந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,725 ஆகவும், சவரன், ரூ.37,800 ஆகவும் இருந்தது.
புற்றுநோய் மருந்து, ஆன்டிபயாடிக்ஸ் விலை குறையும்! அத்தியாவசிய பட்டியலில் 34 மருந்துகள் சேர்ப்பு
இந்நிலையில் புதன்கிழமை(இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 24 குறைந்து ரூ.4,701ஆகக் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.192 சரிந்து, ரூ.37,608ஆக குறைந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,701ஆக விற்கப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த வாரம் தொடங்கியதிலிருந்து 3வதுநாளாக தங்கம் விலை வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.352 குறைந்துள்ளது.
சராசரி குடும்பத்தை பற்றி நினைக்கவில்லை! நிர்மலா சீதாராமனை விளாசிய ப.சிதம்பரம்
அமெரிக்காவில் பணவீக்கக்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்தமாதத்தில் நடக்கும் கூட்டத்தில் வட்டி வீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு வட்டிவீதம் அதிகரிக்கும்பட்சத்தில், முதலீட்டாளர்கள் முதலீட்டை எதிர்த்து டாலர்மீதுமுதலீடு செய்வது அதிகரிக்கும். இதனால் டாலரின் மதிப்பு வலுப்பெறும். தங்கத்துக்கான தேவை குறைந்து விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. இவை அனைத்தும் அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்பைப் பொறுத்து இருக்கும்.
தினசரி ரூ.50 முதலீடு! கிடைப்பதோ ரூ.35 லட்சம்: அஞ்சலகத்தின் இந்த சேமிப்பு திட்டத்தை மறக்காதிங்க
வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் குறைந்து, ரூ.61.80ஆகவும், கிலோவுக்கு ரூ.600 குறைந்து ரூ.61,800 ஆகவும் உயர்ந்துள்ளது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.