
தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சரிந்துள்ளது. சரவனுக்கு 248 ரூபாய் குறைந்துள்ளது.
கடந்த இரு நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.258 வரை விலை குறைந்துள்ளது நடுத்தரக் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 31 ரூபாயும், சவரனுக்கு 248 ரூபாயும் குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,947ஆகவும், சவரன், ரூ.39,576 ஆகவும் இருந்தது.
ஊசலாட்டத்தில் தங்கம்! மீண்டும் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் என்ன?
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செவ்வாய்கிழமை) கிராமுக்கு 31 ரூபாய் சரிந்து ரூ.4,916 ஆகவும், சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து ரூ.39 ஆயிரத்து 328ஆக வீழ்ந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,916க்கு விற்கப்படுகிறது.
அமெரிக்க பெடரல் வங்கி நிதிக்குழுக் கூட்டம் நாளை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் எந்த மாதிரியான முடிவுகள் எடுக்கப்படுமோ என்ற அச்சத்தில் முதலீட்டாளர்கள் இருப்பதால், கவனத்துடன் முதலீட்டை கையாள்கிறார்கள். இதனால் தங்கத்தின் மீதான முதலீடு குறைவதால், விலையும் குறைந்து வருகிறது. பெடரல் வங்கியின் அறிவிப்புக்குப்பின், தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படலாம்.
தொடர் சரிவில் தங்கம்! சவரனுக்கு ரூ.110 குறைந்தது!இன்றைய நிலவரம் என்ன?
கடந்த சனிக்கிழமை முதல் தங்கம் விலை சவரனுக்கு 260ரூபாய் வரை குறைந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து குறையும்பட்சத்தில் தங்கம் வாங்குவோர் விரைவாக வாங்குவது சிறந்தது என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்
வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 10 பைசா குறைந்து ரூ.68.00 ஆகவும், கிலோவுக்கு ரூ.100 குறைந்து, ரூ.68,000 ஆகவும் உள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.