தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்த நிலையில் இன்று குறைந்துள்ளது. இதனால் நடுத்தரக் குடும்பத்து மக்கள் மனதில் நிம்மதி ஏற்பட்டுள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்த நிலையில் இன்று குறைந்துள்ளது. இதனால் நடுத்தரக் குடும்பத்து மக்கள் மனதில் நிம்மதி ஏற்பட்டுள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 17 ரூபாயும், சவரனுக்கு 136 ரூபாயும் சரிந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,775 ஆகவும், சவரன், ரூ.38,200 ஆகவும் இருந்தது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செவ்வாய்கிழமை) கிராமுக்கு 17 ரூபாய் குறைந்து ரூ.4,758 ஆகவும், சவரனுக்கு 136 ரூபாய் சரிந்து, ரூ.38 ஆயிரத்து 064 ஆகவும் வீழ்ச்சி அடைந்தது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,758க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை கடந்த வாரத்தில் கிராம் ஒன்றுக்கு, ரூ.55 அதிகரித்த நிலையில் வர்த்தகம் முடிந்தது.
இதனால் நடுத்தரக் குடும்பத்து மக்கள் கலக்கமடைந்தனர். இந்த வாரத் தொடங்கத்திலும் தங்கம் விலை உயரத் தொடங்கியது. ஆனால், யாரும் எதிர்பாரா வகையில் தங்கம் விலை திடீரென இன்று குறைந்தப சவரனுக்கு ரூ.136 குறைந்துள்ளது.
தங்கம் விலை தொடர் உயர்வு! நடுத்தரக் குடும்பத்து மக்கள் கலக்கம்: இன்றைய நிலவரம் என்ன?
தொடர்ந்து தங்கம் விலை குறையுமா அல்லது நாளை தங்கம் விலை மீண்டும் அதிகரிக்குமா என்ற குழப்பத்துடன் நகைவோர் இருக்க வேண்டிய நிலை இருக்கிறது. கடந்த வாரத்தில் தங்கம் விலை அதிகரித்தநிலையில் இந்த வாரத்தின் நிலை என்பது அடுத்துவரும் நாட்களில் தெரியவரும்.
சர்வதேச அளவில் அமெரிக்க, ஆசியச் சந்தைகள் நிலவரம் சாதகமான நிலையில் இருந்து வருகிறது. அதனால்தான், மும்பை, தேசியப் பங்குச்சந்தைகள் நேற்று ஏற்றத்துடன் முடிந்தன. அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தியபோதிலும், வேலைவாய்ப்பு நிலவரும் வலுவாக இருப்பதால், அமெரிக்காவிலும் பெரிதாக பாதிப்பு இல்லை. அமெரிக்க சந்தையின் எதிரொலி, ஆசியச் சந்தையிலும் இருந்ததால், இந்தியப் பங்குச்சந்தையிலும் ஏற்றமான வர்த்தகம் நேற்று நடந்தது.
எகிறியது தங்கம் விலை!சவரனுக்கு ரூ400க்கு மேல்உயர்வு!வெள்ளியும் விர்ர்ர்! இன்றைய நிலவரம் என்ன?
வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ரூ.66.30 ஆக இருந்தநிலையில் 40 காசு உயர்ந்து, ரூ.66.70ஆகவும், கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து, ரூ. ரூ.66,700 ஆகவும் உயர்ந்துள்ளது.