gold bond scheme: ஜிஎஸ்டி,செய்கூலி, சேதாரம் இல்லை:கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி: தங்க முதலீட்டுக்கு இப்படி திட்டமா

By Pothy RajFirst Published Jun 24, 2022, 1:23 PM IST
Highlights

gold bond scheme : Sovereign Gold Bonds:தங்கம் வாங்கும்போது விதிக்கப்படும் ஜிஎஸ்டி இல்லை, செய்கூலி, சேதாரம் இல்லை, கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி என சலுகைகளை வாரி வழங்கும் திட்டத்தை விட தங்கம் முதலீட்டுக்கு சிறந்த திட்டம் இருக்கிறதா

தங்கம் வாங்கும்போது விதிக்கப்படும் ஜிஎஸ்டி இல்லை, செய்கூலி, சேதாரம் இல்லை, கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி என சலுகைகளை வாரி வழங்கும் திட்டத்தை விட தங்கம் முதலீட்டுக்கு சிறந்த திட்டம் இருக்கிறதா

இந்திய கால்பந்து அணி்க்கு ரூ.16 லட்சத்தில் ஜோதிடர் நியமனம்

ஆம், மத்திய அரசின் தங்கப்பத்திரம் சேமிப்புத் திட்டம்தான் இத்தனை பலன்களை முதலீட்டாளர்களுக்கு வாரி வழங்குகிறது. 2022-23ம் நிதியாண்டுக்கான தங்கப்பத்திரம சேமிப்புத் திட்டத்தை மத்திய அரசு கடந்த 20ம் தேதி அறிமுகம் செய்தது. இந்தத் திட்டம் இன்றுடன் நிறைவடைகிறது. 

தள்ளுபடி

இந்த தங்கப்பத்திரம் சேமிப்புத் திட்டத்தில் 99 சதவீத சுத்த தங்கத்தின் அடிப்படையில் விலை வைக்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.5,091 ஆக ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. 

இலவச ரேஷன் திட்டம் செப்டம்பருக்கு பிறகு இல்லையா

இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவருக்கு ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி கிடைக்கும். ஆண்டுக்கு இருமுறை வட்டித்தொகை கிடைக்கும். 8  ஆண்டுகளுக்குப்பின் அன்றைய தங்கத்தின் விலைக்கு நிகாரக  பணம்கிடைக்கும்.

முதலீட்டு ஆதாய வரி ஏதும் விதிக்கப்படாது. தங்க நகைகளுக்கு விதிக்கப்படுவது போன்று செய்கூலி , சேதாரம் கிடையாது. ஆனால் சுத்ததங்கத்தின் மதப்பில்தான் இருக்கும். குறிப்பாக ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படாது. தங்கத்தை பொருளாக வைக்காமல் டிஜிட்டல் முறையில் வைப்பதால், பாதுகாப்பது எளிதானது

ஆன்-லைன் மூலம் தங்கப்பத்திரத்துக்கு விண்ணப்பம் செய்வர்களுக்கு கிராம் ஒன்றுக்கு ரூ.50 தள்ளுபடி தரவும் ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ள்ளது. அவ்வாறு ஆன்-லைனில் விண்ணப்பித்தால் அவர்களுக்கு கிராம் ரூ.5,041 ஆக நிர்ணயிக்கப்படும்.

எப்படி வாங்கலாம்

இந்த தங்கப்பத்திரத்தை வாங்க விருப்பம் உள்ளவர்கள், பான்கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்குப்புத்தகம், அடையாள அட்டை இதில்ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். இதில் ஏதாவதுஒன்றின் நகலை எடுத்து, தபால் நிலையத்தில் வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தங்கப்பத்திரத்தை வாங்கிக்கொள்ளலாம். 


இன்றுடன் முடிகிறது

தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்ய நினைத்தால் இன்றுக்குள் செய்துவிட வேண்டும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய இன்றுதான் கடைசி நாளாகும். 2-வது கட்ட தங்கப்பத்திரங்கள் விற்பனை ஆகஸ்ட் 22ம் தேதிமுதல் 26ம் தேதி வரை நடக்கிறது.
 

click me!