உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி 2வது இடத்திலிருந்து 3வது இடத்துக்கு சரிந்துள்ளார்.
உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி 2வது இடத்திலிருந்து 3வது இடத்துக்கு சரிந்துள்ளார்.
கடந்த வாரத்தில் வெளியான பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பிஜோஸை பின்னுக்குத் தள்ளி உலகின் 2வது கோடீஸ்வரராக அதானி முன்னேறியநிலையில் சரிந்துள்ளார் என்று ப்ளூம்பெர்க் தெரிவி்த்துள்ளது.
பண்டிகை காலங்களில் 3 ல் ஒரு குடும்பம் ரூ.10,000 மேல் செலவழிப்பு.. ஆய்வறிக்கையில் வெளிவந்த தகவல்..
தற்போது 3வது இடத்தில் இருக்கும் அதானிக்கும், 2வது இடத்தில் உள்ள ஜெப் பிஜோஸுக்கும் இடையே மிகக் குறைந்த அளவு மட்டுமே வேறுபாடு இருக்கிறது. அதானியின் நிகர சொத்து மதிப்பு ரூ.10.98லட்சம் கோடியாகக் குறைந்துவிட்டது. ஜெப் பிஜோஸ் சொத்து மதிப்பு ரூ.11.23 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
கெளதம் அதானி தனது சொத்து மதிப்பில் 609 கோடி டாலர்களை இழந்ததால்தான் 3வதுஇடத்துக்கு தள்ளப்பட்டார். அதேநேரம், ஜெப் பிஜோஸ் 136 கோடி டாலர் சொத்துக்கள் சேர்ந்ததையடுத்து, அவர் 2வது இடத்துக்கு முன்னேறினார்.
டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ.19.93 லட்சம் கோடியாகும்.
சென்னையில் ஐ-போன்14 தயாரிப்பைத் தொடங்கியது ஆப்பிள் நிறுவனம்
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, டாப்-10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறி 11வது இடத்துக்கு சரிந்துள்ளார். முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு ரூ.6.70 லட்சம் கோடியாக உள்ளது.
அதானி, ஜெப் பிஜோஸ் மற்றும் லூயிஸ் விட்டன் நிறுவன அதிபர் பெர்நார்ட் அர்னால்ட் ஆகியோரிடையே 2வது இடத்தைப் பிடிப்பதில் கடும் போட்டி காணப்பட்டது. 2வது இடத்தில் இருந்த அர்னால்டை கீழேஇறக்கி அதானி 2வது இடம் பிடித்திருந்தார்.
அனில் அம்பானிக்கு நவம்.17 வரை கெடு! வருமானவரி துறை நடவடிக்கை எடுக்க மும்பை உயர் நீதிமன்றம் தடை
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளிய அதானி, அதன்பின் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை ஏப்ரல் மாதம் முந்தி 4வது இடத்துக்கு முன்னேறினார்.