Adani FPO:பங்குச்சந்தையில் ஏற்பட்ட ஊசலாட்டம் மற்றும் முதலீட்டாளர்கள் நலன் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அதானி என்டர்பிரைசஸ் எப்பிஓ பங்குகள் விற்பனையை திரும்பப் பெறுகிறோம் என்று கெளதம் அதானி விளக்கம் அளித்துள்ளார்.
Adani FPO: பங்குச்சந்தையில் ஏற்பட்ட ஊசலாட்டம் மற்றும் முதலீட்டாளர்கள் நலன் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அதானி என்டர்பிரைசஸ் எப்பிஓ பங்குகள் விற்பனையை திரும்பப் பெறுகிறோம் என்று கெளதம் அதானி விளக்கம் அளித்துள்ளார்.
அதானி என்டர்பிரைசஸ் நிறுவன் பொதுப் பங்குகளை ரூ.20ஆயிரம் கோடிக்கு வெளியிட்டு நிதி திரட்ட முடிவு செய்தது. இதன்படி கடந்த மாதம் கடைசி 3 நாட்கள் எப்பிஓ விற்பனை நடந்தது.
பட்ஜெட் தாக்கலிலும் பங்குச்சந்தையில் ஊசலாட்டம்: சென்செக்ஸ் உயர்வு: அதானிக்கு ஷாக்
அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் 4.62 கோடி பங்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்ட நிலையில் அதில் 4.55 கோடி பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. நிறுவனமில்லாத முதலீ்ட்டாளர்கள், இந்திய முதலீட்டாளர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 3 மடங்கு அதிக அதிகாக 96.16 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளனர்.
1.28 கோடி பங்குகள் தகுதிவாய்ந்த நிறுவன முதலீ்ட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டநிலையி்ல் அனைத்தும் விற்பனையானது என்று பங்குசந்தையில் அளிக்கப்பட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திடீரென அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் எப்பிஓ-அறிவிப்பை திரும்பப் பெறுவதாகவும், முதலீட்டாளர்களிடம் பணத்தை ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
புதிய வருமானவரி முறைக்கும் நிரந்தரக் கழிவு! எவ்வளவு சேமிக்கலாம்?, பழைய முறை இருக்கா?
இது குறித்து தொழிலதிபர் கெளதம் அதானி இன்று வெளியிட்ட விளக்கத்தில் “ அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எப்பிஓ பங்குகள் முழுமையாக விற்பனையாகின. ஆனால், திடீரென எப்பிஓ-வை ரத்து செய்தது பலருக்கும் வியப்பை அளித்திருக்கும். ஆனால், பங்குச்சந்தையில் நேற்று ஏற்பட்ட கடும் ஊசலாட்டம், முதலீட்டாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, எப்பிஓ- வை தொடர்ந்து செயல்படுத்த வேண்டாம் என்று நிர்வாகக் குழு முடிவு செய்தது.
இந்த முடிவால் எதிர்காலத் திட்டங்கள், ஏற்கெனவே செயல்முறையில் இருக்கும் திட்டங்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது. தொடர்ந்து நாங்கள் செயல்பட்டு, திட்டங்களை குறித்த நேரத்தில் முடிப்போம். அதானி குழுமத்தின் அடித்தளம் வலுவாக இருக்கிறது.
எங்கள் நிறுவனத்தின் வரவு செலவு அறிக்கையும் ஆரோக்கியமாக இருக்கிறது,சொத்துக்களும் உள்ளன, பணப்புழக்கமும் தேவையான அளவு வலுவாக இருக்கிறது. எங்களுக்குரிய கடனை செலுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், முந்தைய கடன்களையும் முறையாகச் செலுத்தியுள்ளோம். நீண்டகால மதிப்பை உருவாக்கும் அம்சங்களில் கவனம் செலுத்துவோம். சந்தையில் ஊசலாட்டம் குறைந்து நிலைத்தன்மை வந்தபின், மூதலதனச் சந்தைத்திட்டத்தை வகுப்போம்.
அதானி என்டர்பிரைசஸ் FPO திடீர் வாபஸ்: முதலீட்டாளர்களிடம் பணத்தை திரும்ப அளிக்க முடிவு
எங்களின் ஒவ்வொரு வணிகமும் பொறுப்பான வழியில் மதிப்பை உருவாக்குவதைத் தொடரும். எங்கள் நிர்வாகக் கொள்கைகளின் வெவ்வேறு நிறுவனங்களில் நாங்கள் உருவாக்கிய பல சர்வதேச கூட்டாண்மைகளிலிருந்து வருகிறது.
இவ்வாறு அதானி தெரிவித்துள்ளார்.