
fpi in india:கடந்த மே மாதத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையிலிருந்து ரூ.40ஆயிரம் கோடி முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர், 2022ம் ஆண்டில் இதுவரை ரூ.1.6 லட்சம் கோடி முதலீடு வெளியேறியுள்ளது.. தொடர்ந்து 8-வது மாதமாக முதலீடு திரும்பப் பெறப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தி வருகிறது. இதனால் பாதுகாப்பான முதலீடாக இருக்க வேண்டும், வட்டிஆதாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப்பெற்று தங்கள் நாட்டில் முதலீடு செய்து வருகிறார்கள்.
இந்த 2022ம் ஆண்டில் மட்டும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் மட்டும் ரூ.1.69 லட்சம் கோடியை பங்குச்சந்தையிலிருந்து வெளியே எடுத்துள்ளனர். இதில் கடந்த மே மாதத்தில் மட்டும் ரூ.40 ஆயிரம் கோடி முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர்.
புவிஅரசியல் சூழல், வளரும் நாடுகளில் பணவீக்க உயர்வு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டிவீதத்தை உயர்த்தும் மத்திய வங்கிகள் உள்ளிட்டவை அந்நிய நிறுவன முதலீட்டாளர்களை ஊசலாட்டத்தில் வைத்துள்ளது.
அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை வெளியே எடுப்பது அதிகரிக்கும்போது, இந்தியப் பங்குச்சந்தையும் ஊசலாடுகிறது. மும்பை, தேசியப் பங்குச்சந்தையை பலவீனமாக்கும் முக்கிய காரணிகளில் முதலீடு வெளியேறுவது அதிகரி்ப்பு ஒன்றாகும்.
கடந்த 2021 அக்டோபர் முதல் 2022 மே மாதம் வரை அந்நிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையிலிருந்து ரூ.2.07 லட்சம் கோடி முதலீட்டை வெளியே எடுத்து தங்கள் சொந்தநாட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர். இது ஜூன் மாதத்திலும் அதிகரிக்கும் என்று சந்தை வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஜியோஜித் நிதிச்சேவையின் தலைமை முதலீட்டு ஆலோசகர் விஜயகுமார் கூறுகையில் “ ஜூன் மாதத்தில் ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கைக் கூட்டம் நடக்கிறது, அதிகரித்து வரும் பணவீக்கம், வட்டி வீதம் உயரும் என்ற எதிர்பார்ப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவை அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறுவதை தீர்மானிக்கும்.
அமெரிக்க பங்குப்பத்திரங்களுக்கு எதிராக டாலர் மதிப்பு சீரடைந்தார், அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையிலிருந்து வெளியேறுவது குறையும். அல்லது அமெரிக்காவில் பணவீக்கம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து, பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தினால், இந்தியச்சந்தையிலிருந்து அந்நிய முதலீ்ட்டாளர்கள் வெளியேறுவது அதிகரிக்கும்” எனத் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.