
dhoni : garuda aerospace share price : இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சென்னையைச் சேர்ந்த ட்ரோன் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் பங்குதாரராக மாறியுள்ளார்.
ஏற்கெனவே மது தயாரிப்பு, சிமெண்ட் ஆலை, விவசாயம், விளம்பர நிறுவனம் என பல்வேறு பிரிவு வர்த்தகத்தில் கவனம் செலுத்திவரும் தோனி அடுத்ததாக ட்ரோன் நிறுவனத்திலும் இறங்கியுள்ளார்.
எதிர்காலத்தில் ட்ரோன்கள் மூலம்தான் ஏராளமான செயல்கள் நடக்கப் போகிறது, ட்ரோன்களின் தேவை அதிகம் இருக்கும் என்பதை உணர்ந்து தோனி முதலீடு செய்துள்ளார்.
இந்தத் தகவலை ஸ்டார்ட் அப் நிறுவனமான கருடா ட்ரோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் சமீபத்தில் தனது திட்டங்களை வெளியிட்டது. அதில் தங்களின் முக்கிய நோக்கம் தங்களின் ட்ரோன்கள் வேளாண் வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும், அனைத்து வகையான ட்ரோன்களும் கிராமங்களுக்கும் தொழில்முனைவோர்களுக்கு அனுப்பி வயல்கள், வேளாண் நிலங்களில் பூச்சிமருந்து, உரமிடுதலுக்கு பயன்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தது.
சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, ராஞ்சிியல் மிகப்பெரிய பண்ணையை ராஞ்சியில் வைத்துள்ளார். அங்கு பழங்கங்கள், காய்கறிகளை ஏராளமாக பயிரிட்டு வருகிறார். இந்நிலையில், கருடா ட்ரோன் நிறுவனத்தில் பங்குதாரராக மாற தோனி மாறியுள்ளது எதிர்கால திட்டங்களுக்காகத்தான் எனத் தெரிகிறது.
தோனி வெளியிட்ட அறிக்கையில் “ கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக மாறியது மகிழ்ச்சியளிக்கிறது. ட்ரோன்களுக்கான தேவையை இந்த நிறுவனம் நிறைவேற்றி நல்ல வளர்ச்சி பெறுவதை காண காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்
கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் சிஇஓ அக்னீஸ்வர் ஜெயபிரகாஷ் கூறுகையில் “ நான் தோனியின் தீவிர ரசிகன். கருடா குழுமத்தின் கனவு நிறைவேறியுள்ளது. தோனியின் அர்ப்பணிப்பு, நிறுவனத்தின் தூதராக வரும் தோனியின் பங்களிப்பு நிச்சயம் எங்களை சிறப்பாகச் செயல்பட வைக்கும். எங்களைஊக்கப்படுத்தும்.
கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் சார்பில் 300 ட்ரோன்கள,் 50 பைலட்கள் 26 நகரங்களில் உள்ளனர். இந்தியாவின் முதல் முக்கியமான ட்ரோன் நிறுவனமாக கருடா இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஸ்விக்கி நிறுவனம் ட்ரோன்கள் மூலம் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே உணவு சப்ளை செய்யும் திட்டத்தை சோதனை முயற்சியாகச் செயல்படுத்த இருக்கிறது. இதற்காக 4 ட்ரோன் நிறுவனங்களைத் தேர்வு செய்துள்ளது. அதில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனமும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.