forex reserve india: அந்நியச் செலாவணி கையிருப்பும் குறைந்தது, தங்கம் இருப்பும் சரிந்தது: ஆர்பிஐ தகவல்

By Pothy RajFirst Published May 21, 2022, 10:08 AM IST
Highlights

forex reserve india :இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஓர்ஆண்டில் இல்லாத அளவு மே13ம் தேதி முடிந்த வாரத்தில் 267.60 கோடி டாலர் குறைந்து, 59,327.90 கோடி டாலராகக் சரிந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஓர்ஆண்டில் இல்லாத அளவு மே13ம் தேதி முடிந்த வாரத்தில் 267.60 கோடி டாலர் குறைந்து, 59,327.90 கோடி டாலராகக் சரிந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த மே 6ம் தேதி வாரமுடிவில் அந்நியச் செலவாணி 177 கோடி டாலர் குறைந்து, 59,595.40 கோடி டாலராக இருந்தது. கடந்த ஒரு வாரத்துக்குள் 267 கோடிக்கும் அதிகமான டாலர் இருப்பு குறைந்துள்ளது.

நாட்டின் பொருளாதார நிலை குறித்து ரிசர்வ் வங்கி மாதாந்திர பொருளாதார அறிக்கையை வெளியிட்டது. அதில், “ கடந்த மே 6ம் தேதி நிலவரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு என்பது, 59600 கோடி டாலர் இருந்தது. இது 10 மாதங்களுக்கு இறக்குமதியை சமாளிக்கும் திறனுக்கு சமம்” எனத் தெரிவித்தது

ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்ததற்கு முக்கியக் காரணம் வெளிநாட்டுக் கரன்ஸி சொத்து மதிப்பு(எப்சிஏ) குறைந்ததுதான். அதுமட்டுமல்லாமல் தங்கம் இருப்பும் குறைந்துள்ளது. எப்சிஏ மதிப்பு 130.20 கோடி டாலர் குறைந்து, 52955.20 கோடி டாலராகக் குறைந்துள்ளது. தங்கம் கையிருப்பு 116.90 கோடி குறைந்து, 405.70 கோடி டாலராகச் சரிந்துள்ளது. சர்வதேச நிதியத்தில் இந்தியாவுக்கான சிறப்பு வரைவு உரிமையும் 1.65 கோடி டாலர் குறைந்து, 182.04 கோடி டாலராகச் சரிந்துள்ளது. 

இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால்தான் டாலர் கையிருப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது இந்தியச் சந்தையிலிருந்து முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறும்போது டாலரின் தேவை அதிகரிக்கும். அப்போது டாலர் அதிகளவில் நாட்டை விட்டு வெளியேறும்போது, ரூபாய் மதிப்பு நெருக்கடிக்கு உள்ளாகி மதிப்பை இழக்கிறது. டாலரின் மதிப்பு வலுப்பெறுகிறது. 

அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப்பெற்று வெளியேறுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  கடந்த ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து இதுவரை 6.97 கோடி டாலர்கள் முதலீட்டை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர். 2022ம் ஆண்டில் இதுவரை 118 கோடி டாலர்களை திரும்பப் பெற்றுள்ளனர். 

இதனால் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, 59,327 கோடி டாலராகக் குறைந்துவிட்டது. தொடர்ந்து 10-வது வாரமாக அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து வருவது கவலைக்குரியது. ஓர் ஆண்டில் 60000 கோடி டாலருக்கும் குறைவாக முதல்முறையாக அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது.
 

click me!