ஃபிக்ஸட் டெபாசிட் எனப்படும் FD விதிகளில் சில மாற்றங்களை இந்திய ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது
நிலையான வைப்பு தொகை எனப்படும் ஃபிக்ஸட் டெபாசிட் என்பது பண முதலீட்டு திட்டங்களில் ஒரு வகையாகும். இத்திட்டத்தின் கிழ், வங்கி அல்லது வங்கி சாராத நிதி நிறுவனங்களில் நிதியை குறிப்பிட்ட காலகட்டத்திற்கு வைப்பு வைக்க வேண்டும். முதிர்வு காலம் வரை அந்த நிதியை வங்கியில் இருந்து எடுக்க முடியாது. முதிர்வு காலம் முடிந்ததும் அந்த தொகைக்கான வட்டி நமக்கு கிடைக்கும். பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களின் பலரது விருப்பமாகவும் எஃப்டி உள்ளது.
இந்த நிலையில், ஃபிக்ஸட் டெபாசிட் விதிகளில் சில மாற்றங்களை இந்திய ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது. அதன்படி, ரூ.1 கோடி வரையிலான அனைத்து FDகளிலும் முன்கூட்டியே திரும்பப் பெறும் வசதியை கொண்டு வந்துள்ளது. தற்போது இந்த வரம்பு ரூ.15 லட்சம் என இருக்கும் நிலையில், அதனை ரூ.1 கோடியாக ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது.
undefined
“மறுஆய்வின்போது, திரும்பப் பெற முடியாத எஃப்டிக்கான குறைந்தபட்சத் தொகையை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது ரூ. 1 கோடி அல்லது அதற்கும் குறைவான தொகைக்கு தனிநபர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படும் அனைத்து FDகளிலும் முன்கூட்டியே திரும்பப் பெறும் வசதி இருக்கும்.” என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகள் இயங்காது.. எந்தெந்த நாட்கள் தெரியுமா? முழு விவரம் இதோ..
வங்கிகள் பொதுவாக திரும்பப் பெற முடியாத எஃப்டிகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. தவணைக்காலம் மற்றும் டெபாசிட்டுகளின் அளவை பொறுத்து வைப்புத்தொகையை திரும்பப் பெறாததன் அடிப்படையில், (அதாவது முன்கூட்டியே திரும்பப் பெறும் விருப்பத்தை தேர்ந்தெடுக்காதது) எஃப்டி தொகைக்கான வட்டியில் வேறுபட்ட விகிதங்களை வழங்கவும் வங்கிகள் அனுமதிக்கப்படுகின்றன எனவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு இந்த புதிய விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வரும் எனவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், வாடிக்கையாளர்களின் கடன் தகவல்களை 30 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும். அதனை சரிசெய்வதில் தாமதம் ஏற்பட்டால், நாள் ஒன்றுக்கு ரூ.100 இழப்பீடு வழங்க வேண்டும். வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோர் கேட்கப்படும்போது ஒரு எச்சரிக்கை செய்தியை அனுப்புவது அவசியம். கடன் வழங்கும் நிறுவனங்கள் எஸ்எம்எஸ்/மின்னஞ்சல் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விழிப்பூட்டல்களை அனுப்ப வேண்டும். ஒரு வாடிக்கையாளர் டீஃபால்ட் நிலைக்கு செல்லவிருந்தால், அதை பற்றி புகாரளிக்கும் முன் அதை வாடிக்கையாளருக்குத் தெரிவிக்க வேண்டியது அவசியம் என்பன போன்ற உத்தரவுகளையும் ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது.