ரூ.10,000 முதலீடு முதல் ரூ.4,000 கோடி வருமானம் வரை.. நிராகரிப்பு, தோல்வி, வறுமையை கடந்து சாதித்த நபர்..!

By Ramya s  |  First Published Oct 27, 2023, 9:10 AM IST

ஒரு வெற்றிகரமான வணிக நிறுவனத்தை உருவாக்க சாதாரண தொடக்கத்திலிருந்து வந்த ஒரு மனிதனின் வாழ்க்கைக் கதை நிச்சயம் பலருக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது


இன்று மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தின் தலைவராக இருக்கும் சந்துபாய் விரானி அவ்வளவு எளிதில் இந்த இடத்திற்கு வந்துவிடவில்லை. ஆரம்பத்தில் பல நிதி நெருக்கடிகளை சந்தித்த அவர் தனது மன உறுதி, புத்திசாலித்தனம் மற்றும் விடாமுயற்சியால் உயர்ந்துள்ளார். ஒரு வெற்றிகரமான வணிக நிறுவனத்தை உருவாக்க சாதாரண தொடக்கத்திலிருந்து வந்த ஒரு மனிதனின் வாழ்க்கைக் கதை நிச்சயம் பலருக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது. ஆம். அவரின் வெற்றிக்கதையை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

யார் இந்த சந்துபாய் விராணி ?

Tap to resize

Latest Videos

குஜராத்தை சேர்ந்த சந்துபாய், சாதாரணமான குடும்பத்தில் வளர்ந்தவர். குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக, அவரால் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. தனது தந்தையின் சிறிய நிதியில், குடும்பம் நல்ல எதிர்காலம் என்ற நம்பிக்கையில் துண்டோராஜிக்கு குடிபெயர்ந்தது. ரூ. 20,000 முதலீட்டில், சந்துபாய் மற்றும் அவரது சகோதரர்கள் மேக்ஜிபாய் மற்றும் பிகுபாய் ஆகியோர் முதலில் ராஜ்கோட் விவசாய பொருட்கள் மற்றும் இயந்திர சந்தையில் நுழைந்தனர். இருப்பினும், வணிகம் மந்தமடைந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தோல்வியடைந்தது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பின்னர் பல பகுதிநேர வேலைகளை இந்த சகோதர்கள் செய்தனர். திரையரங்கு இருக்கைகளை சரிசெய்வது முதல் போஸ்டர்கள் வைப்பது மற்றும் திரைப்படங்களுக்கான கேண்டீன் நடத்துவது என அனைத்தையும் சந்துபாய் செய்தார். எனினும் கேண்டீனுக்கு வாடகை செலுத்தாததால் அவர்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்தளவுக்கு அளவிற்கு நிதிச் சிக்கல்கள் அதிகரித்தன. ஆனால் அவர் உறுதியாக இருந்தார், கடனை அடைத்தார்.

சிறந்த கேண்டீன் சேவைக்காகப் பாராட்டப்பட்ட சகோதரர்களுக்கு மாதம் ரூ. 1,000 சம்பளத்தில் வேலை வழங்கப்பட்டது. இந்த திரையரங்கில்தான் பார்வையாளர்களுக்கு சிப்ஸ் மீதான விருப்பத்தை சந்துபாய் கவனித்தார். சந்தையின் முக்கிய இடத்தைக் கண்டறிந்து, வெறும் 10,000 ரூபாயில் வீட்டில் ஒரு கொட்டகையில் சொந்தமாக சிப்ஸ் தயாரிக்கத் தொடங்கினார். சுவை மற்றும் தரத்திற்காக நிறைய பாராட்டுகளைப் பெற்ற பிறகு, சந்துபாய் ஒரு பெரிய ரிஸ்க் எடுக்க முடிவு செய்தார்.

Fogg, Moov போன்ற ஐகானிக் பிராண்டுகளின் மூளையாக இருந்த தர்ஷன் பட்டேல்.. அவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

குஜராத் மாநிலத்தின் முதல் உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆலையை 1989 இல் ராஜ்கோட்டின் அஜி ஜிஐடிசியில் நிறுவினார். 1992 ஆம் ஆண்டில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, விராணி, பாலாஜி வேஃபர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நிறுவினார். ஒவ்வொரு நாளும் 10 மில்லியன் கிலோ சால்ட் சிப்ஸை நாடு முழுவதும் உள்ள அதன் நான்கு மிகப்பெரிய தொழிற்சாலைகளில் தயாரிக்கிறது.

2021 நிதியாண்டிற்கான நிறுவனத்தின் வருவாய் குறிப்பிடத்தக்க வகையில் ரூ.4,000 கோடியை எட்டியுள்ளது. அந்த நிறுவனத்தில் சுமார் 5000 பேர் பணிபுரிகின்றனர்.  அவர்களில் 50% பெண்கள் என்பது கூடுதல் சிறப்பு. இவர்கள் அனைவரும் அந்நிறுவனத்தின் வெற்றிக்கு உந்து சக்தியாக உள்ளனர். தொழில் முனைவோர் மனப்பான்மைக்கு சந்துபாய் விராணியின் பயணம் ஒரு ஊக்கமளிக்கும் உதாரணம் என்பதில் சந்தேகம் இல்லை.

click me!