நவம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
அக்டோபர் மாதம் முடிவடைய உள்ள நிலையில் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. எனவே நவம்பரில் வரவிருக்கும் வங்கி விடுமுறைகள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். வாடிக்கையாளர்கள் அதற்கேற்ப தங்கள் நிதி நடவடிக்கைகளைத் திட்டமிடுவதை உறுதி செய்வதற்காக இந்திய ரிசர்வ் வங்கி இந்த பட்டியலை முன்கூட்டியே வெளியிடுகிறது.
அதன்படி நவம்பர் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நாடு முழுவதும் இந்த விடுமுறை நாட்கள் பொருந்தாது. ஒவ்வொரு மாநிலத்தையும் பொறுத்து வங்கி விடுமுறை நாட்கள் மாறுபடும். எனவே அடுத்த மாதம் உங்களுக்கு வங்கி வேலை இருந்தால், வங்கி விடுமுறை நாட்களைப் பார்த்து, அதற்கேற்ப வேலையை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள் உட்பட 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கன்னட ராஜ்யோத்சவா/குட்/கர்வா சௌத் விழாவையொட்டி சில மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல். வாங்கலா விழா, கோவர்தன் பூஜை/லக்ஷ்மி பூஜை, தீபாவளி)/தீபாவளி, விக்ரம் சம்வந்த் புத்தாண்டு தினம்/லக்ஷ்மி பூஜை, பைடூஜ்/சித்ரகுப்த் ஜெயந்தி/லக்ஷ்மி பூஜை, தீபாவளி, நிங்கோல் சத்ரித்வி, குருநானக் ஜெயந்தி/கார்த்திகா பூர்ணிமா/ரஹஸ் பூர்ணிமா மற்றும் கனகதாச ஜெயந்தி ஆகிய பண்டிகைகளை பொறுத்து பல மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாத விடுமுறை பட்டியல்
நீங்க இந்த வங்கி வாடிக்கையாளரா..! இனிமேல் இந்த கட்டணங்கள் கிடையாது - முழு விபரம் இதோ !!
எனினும் இந்த விடுமுறை நாட்களில், நீங்கள் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தால், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் அல்லது UPI போன்ற ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கும் எந்த தடையும் இருக்காது.