பிப்ரவரி 3-ம் தேதி தொடங்குகிறது BSE  வர்த்தகம் .....!

Asianet News Tamil  
Published : Jan 30, 2017, 07:32 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
பிப்ரவரி 3-ம் தேதி தொடங்குகிறது BSE  வர்த்தகம் .....!

சுருக்கம்

பிப்ரவரி 3-ம் தேதி தொடங்குகிறது BSE  வர்த்தகம் .....!

பாம்பே ஸ்டாக்  எக்ஸ்சேஞ்ச்  எனப்படும் BSE, வரும் பிப்ரவரி 3-ம் தேதி,  தன்னுடைய  வர்த்தகத்தை  தொடங்குகிறது. அதன்படி, இந்த நிறுவனத்தின் ஐபிஓ கடந்த 23 முதல் 25-ம் தேதி வரை நடந்தது.

பங்கின் விலை :

நிறுவனத்தின் ஐபிஓ கடந்த 23 முதல் 25-ம் தேதி வரை நடந்தது.இதில் வெளியிடப்பட்ட ஒரு பங்கின் விலை,  ரூ.805 - 806 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ரூ.1,243 கோடி  ரூபாய்  திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக   செய்திகள்  வெளியாகி உள்ளது. இதற்காக  இதுவரை 51 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள்  குவிந்துள்ளதாக  செய்திகள்  வெளியாகி உள்ளது.

ஐபிஓ:

2016-ம் ஆண்டில் மட்டும், 26 நிறுவனங்களின் ஐபிஓ வெளியானது. இதன் மூலம் ரூ.26,000 கோடி அளவுக்கு நிதி திரட்டப்பட்டன. இந்நிலையில்,  பிஎஸ்இ-யின் போட்டி நிறுவனமான என்எஸ்இயும், பொதுப்பங்கு வெளியிடுவதற்காக செபியிடம்  கோரியுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

10 ஆவது இடத்தில் பிஎஸ்இ :

சர்வதேச அளவில், பிஎஸ்இ பத்தாவது இடத்தில உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1,13,87,346 கோடி என்பது  குறிப்பிடத்தக்கது.

 

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

OYO, GPay Business வாடிக்கையாளர்களே உஷார்.. இதை உடனே தெரிஞ்சுக்கோங்க!
2026-ல் இதெல்லாம் நடக்கும்? பாபா வாங்கா கொடுத்த மிகப்பெரிய எச்சரிக்கை