தமிழகம் முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.. சென்னையில் எந்தெந்த இடங்கள் தெரியுமா?

By vinoth kumarFirst Published Apr 1, 2023, 9:12 AM IST
Highlights

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. 

தமிழ்நாட்டில் 29 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ரூ.10 முதல் ரூ.60 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து அத்தியவாசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. சுங்கச்சாவடிகளையும் அந்த அமைச்சகமே நெடுஞ்சாலைகள் ஆணையங்கள் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்து வருகிறது.  இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் 55 சுங்கச்சாவடிகள் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு பழைய கட்டணம் ரூ.95க்கு பதிலாக ரூ.5 உயர்ந்து புதிய கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும். எல்சிவி, எல்ஜிவி, மினி பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு பழைய கட்டணம் ரூ.155 வசூலித்த நிலையில் தற்போது ரூ.10 உயர்ந்து ரூ.165 புதிய கட்டணமாகவும், பேருந்து, டிரக் உள்ளிட்ட வாகனங்களுக்கு பழைய கட்டணம் ரூ.325லிருந்து ரூ.20 உயர்ந்து புதிய கட்டணமாக ரூ.345 உயர்ந்துள்ளது.

சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு செல்லும் வழிகளிலும் கோவை, மதுரை செல்லும் வழிகளிலும் உள்ள சுங்கச்சவாடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னையில் வானகரம், பரனூர், ஸ்ரீபெரும்புதூர், சூரப்பட்டு, பட்டரை பெரும்புதூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

click me!