நாட்டு மக்களின் நலனுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகையை வைத்து சில விஷமிகள் ஆன்லைன் கொள்ளையில் இறங்கியுள்ளனர்.
இந்தியாவில் காட்டுத்தீ போல் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் படி அனுமதி அளித்துள்ளன.
undefined
இதையும் படிங்க: “இதைவிட குட்டை டவுசர் கிடைக்கலையா?”.... யாஷிகா ஆனந்தை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்...!
ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. எனவே சாமானியர்கள் கடன் சுமையை குறைக்கும் விதமாக 3 மாதத்திற்கு இ.எம்.ஐ. கட்டத்தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாட்டு மக்களின் நலனுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகையை வைத்து சில விஷமிகள் ஆன்லைன் கொள்ளையில் இறங்கியுள்ளனர்.
அதாவது, இஎம்ஐ சலுகையை ஆக்டிவேட் செய்வதாக கூறி யாரேனும் போன் செய்து வங்கி கணக்கு, பாஸ்வேர்ட், கார்டு எண்கள் உள்ளிட்டவற்றை கேட்டால் கொடுக்க வேண்டாம் என வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களை எச்சரித்து வருகிறது. பெரும்பாலான வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்கள் ரிசர்வ் வங்கியின் இஎம்ஐ சலுகையை பெற அங்கீகரிக்கப்பட்ட மெயில் ஐடி மூலம் விண்ணப்பிக்க கோரியுள்ளன.
இதையும் படிங்க: வீட்டுக்குள்ள டிரஸ் எதுக்கு... ரசிகர்களுக்காக ஓவர் தாராளம் காட்டும் அடா சர்மா...!
இந்த சலுகையை பயன்படுத்திக் கொண்ட ஆன்லைன் மோசடி பேர்வழிகள், ஒன் டைம் பாஸ்வேர்டு, கணக்கு எண், டெபிட் கார்டு நெம்பர், அக்கவுண்ட் பின் நம்பர் ஆகியவற்றை பெற்று வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை திருடுவதாக புகார் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் சட்டை பட்டனை கழட்டி போஸ்... கொரோனா ரணகளத்திலும் கிளு,கிளுப்பு காட்டும் ரம்யா பாண்டியன்...!
இப்படிப்பட்ட மோசடி ஆசாமிகளிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும் படியும், உங்களது வங்கி கணக்கு விபரங்களை கேட்டு ஒருபோதும் வங்கியில் இருந்து போன் செய்யப்பட மாட்டாது என்றும் ஆக்ஸிஸ், எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களை மெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாக உஷார் படுத்திவருகின்றனர்.