மூன்று மாத EMI நிறுத்தி வைப்பு மக்களை ஏமாற்றும் அறிவிப்பா..? காற்றில் பறந்த ரிசர்வ் வங்கி உத்தரவு..?

By Thiraviaraj RMFirst Published Apr 1, 2020, 5:53 PM IST
Highlights

கடன் தொகையை செலுத்தாவிட்டால், வங்கிகள் நடவடிக்கை எடுக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் ஆழ்ந்துள்ளனர். 

கடன் தொகையை செலுத்தாவிட்டால், வங்கிகள் நடவடிக்கை எடுக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் ஆழ்ந்துள்ளனர். 

இது குறித்து வங்கித் துறை வட்டாரங்களில் விசாரித்தால், ’ரிசர்வ் வங்கி அறிவித்தபடி, மூன்று மாதங்களுக்கான கடன் தவணையை செலுத்த முடியாதவர்கள், 'இ.எம்.ஐ., பிடித்தத்தை ஒத்தி வைக்க வேண்டும்' என, கடன் வாங்கிய வங்கிகளுக்கு, முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், கடன் வாங்கியவர்களின் கணக்கிலிருந்து, அதற்கான தொகை, தானாகவே பிடித்தம் செய்யப்படும். ஒத்திவைப்பு இந்த மூன்று மாத, இ.எம்.ஐ., தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறதே தவிர, ரத்து செய்யப்படவில்லை.

எப்படியிருந்தாலும், இந்த தொகையை, வாடிக்கையாளர்கள் செலுத்தித் தான் ஆக வேண்டும். இந்த மூன்று மாத, இ.எம்.ஐ., எப்போது செலுத்த வேண்டும் என்பது குறித்து, பின்னர் அறிவிக்கப்படும்’’ எனக் கூறுகின்றனர். 

இது குறித்து தனியார் வங்கி அலுவலர் ஒருவரிடம் விசாரித்தபோது, ‘’தற்போதெல்லாம் எல்லா வங்கிகளும் கம்ப்யூட்டர் பரிவர்தனையைத்தான் மேற்கொள்கின்றன. ஒருவர் கடன் வாங்கும்போது repayment schedule மார்க் செய்தால் அது அந்த குறிப்பிட்ட நாளில் repayment debit generate செய்து கணக்கில் தகுந்த பணம் இல்லை என்றால் due list-ல் சேர்த்துவிடும்.

அதை மாற்ற எல்லா கணக்கிற்கும் பொதுவாக ஒரு program எழுத முடியாது. ஒவ்வொரு கணக்கிற்கும்  ஒவ்வொரு மாதிரியான ப்ரோக்ராம் interest installment என்று இருக்கும். தனி நபர் கடனுக்கும் வேறு கடனுக்கும் ஒரே மாதிரியான repayment program இருக்காது. EMI கட்ட தவறும் பட்சத்தில் அது BASEL NORMS படி irregular கணக்காக காட்டும். 90 நாட்கள் due என்றால் NPA ஆகிவிடும். எல்லாம் மெசின் ஜெனெரேட்டட் program அதனால், தான் கடன் வாங்கியோர்களின் கடிதம் மூலம் அந்த கணக்கின் repayment schedule மாற்றப்படும்.

Repahse செய்யும் போதும், reschedule செய்யும்போதும் இப்படிதான் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி விதிகள் உள்ளது. Blanket deferrment கொடுக்க முடியாது. அப்படி செய்தால் அடுத்த காலாண்டில் எந்த வங்கியும் லாபம் காட்ட முடியாது. நிறைய Technical aspect உள்ள விஷயம். கம்ப்ளீட் ப்ரோக்ராம் மாற்றுவது இயலாத ஒன்று. ஒவ்வொரு வங்கியும் வெவ்வேறு தளத்தில் இயங்கும் நிலை.  ஆகவே ரிசர்வ் வங்கி கொடுக்கும் விதிகளை நடைமுறைப்படுத்த சில வாரங்கள் ஆகும். குறுஞ்செய்தியில் நியாபகம் ஊட்டுவதெல்லாம்  auto generated மெசஜ்ஸ். சரியாக கட்ட முடிந்தவர்களும், கட்ட இயலாதவர்களும் ஒரே தராசில் வைக்க முடியாது. கட்ட முடியாதவர்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளை அணுகி கடிதம் கொடுத்து ஈ.எம்.ஐ கட்ட கால அவகாசம் கேட்கலாம். இந்த மாதிரி deferrment செய்ய அரசு RBI மூலம் அறிவுறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

click me!