
கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தொழில்துறையினருக்கு மாத தவணை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சக்திகாந்ததாஸ் டெல்லியில் செய்தியாளர்களை சந்திதார். அப்போது அவர் கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து கவனித்துவருவதாக கூறினார். கடன்களுக்கான மாத தவணைகளை செலுத்த 3 மாதங்கள் அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தனிநபர்கள், பொது நிறுவனங்கள் வாங்கியுள்ள கடன்களுக்கான தவணைகளைச் செலுத்த 3 மாதங்கள் வரை வங்கிகள் கால அவகாசம் அளிக்கலாம். வங்கிக் கடன் நிலுவைகளுக்கு 3 மாதம் கழித்து தவணை செலுத்த வங்கிகள் அனுமதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதமானது 5.15 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ரிவர்ஸ் ரெப்போ 4.9 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கான ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டிருப்பதால் வீட்டு கடன் வட்டி குறைய வாய்ப்புள்ளது. வீட்டுக்கடன் வட்டி மட்டுமின்றி தொழில்துறையினர் பெற்ற கடன்களுக்கான வட்டியும் குறைய வாய்ப்புள்ளது. வட்டி குறைப்பு காரணாக மாத தவணைகளின் எண்ணிக்கையும் குறையக்கூடும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.