கொரோனாவால் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்பு... நோ மினிமம் பேலன்ஸ்.. எந்த வங்கி ஏடிஎம்களிலும் பணம் எடுக்கலாம்..!

Published : Mar 24, 2020, 05:15 PM IST
கொரோனாவால் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்பு... நோ மினிமம் பேலன்ஸ்.. எந்த வங்கி ஏடிஎம்களிலும் பணம் எடுக்கலாம்..!

சுருக்கம்

 தற்போதையை நிலவரம் கவலை அளிக்கிறது. கடந்த 2 மாதமாக தொழில் நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன. வருமான வரி, ஜிஎஸ்டி தாக்கல் உள்ளிட்டவற்றில் சலுகை அளிக்கப்படும். தொழில்துறையினரின் கருத்துகளை கேட்டறிந்து வருகிறோம். கொரோனா பாதிப்பிற்கான நிவாரண நிதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

டெபிட் கார்டு மூலம் ஏடிஎம்களில் எடுக்கப்படும் பணத்திற்கு அடுத்த 3 மாதங்களுக்கு எவ்வித சேவை கட்டணமும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

 டெல்லியில் மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் மற்றும் இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது;- தற்போதையை நிலவரம் கவலை அளிக்கிறது. கடந்த 2 மாதமாக தொழில் நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன. வருமான வரி, ஜிஎஸ்டி தாக்கல் உள்ளிட்டவற்றில் சலுகை அளிக்கப்படும். தொழில்துறையினரின் கருத்துகளை கேட்டறிந்து வருகிறோம். கொரோனா பாதிப்பிற்கான நிவாரண நிதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

2018-19ஆம் நிதியாண்டுக்கான வருமானவரித் தாக்கல் செய்ய ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. தாமதமாக செலுத்தப்படும் வருமானவரி கணக்கிற்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் 12சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாகக் குறைக்கப்படும். ஆதார் கார்டு - பான் கார்டு இணைப்பிற்கான அவகாசம் மார்ச் 31-ல் இருந்து ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், வங்கி சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்க வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். 3 மாதங்களுக்கு பிற வங்கி ஏடிஎம்களில் கட்டணமில்லாமல் பணம் எடுக்க சலுகை அளிக்கப்படுகிறது. வங்கிகளுக்கு நேரில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும், டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டும் என நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்