
செல்போன் போன் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த அந்தந்த நிறுவனங்கள் முடிவு செய்ய உள்ளன.
மொபைல் போன்' வாடிக்கையாளர்களுக்கான கட்டணங்களை நிர்ணயிப்பது குறித்து, அந்தந்த நிறுவனங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என, அரசு அறிவித்து இருந்தது. தொலை தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் போட்டி காரணமாக, 'கட்டண விவகாரத்தில், அரசு தலையிட வேண்டும்' என, தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்தன.
இது குறித்து பரிசீலித்த நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த், 'தொலைபேசி அழைப்புகள் மற்றும் 'மொபைல் டேட்டா'க்களுக்கு, தொலைபேசி நிறுவனங்கள், குறைந்தபட்ச அடிப்படை விலை நிர்ணயம் செய்து கொள்ள அனுமதி அளிப்பதை தவிர, வேறு வழியில்லை' என, தெரிவித்து விட்டார். இதையடுத்து, தொலைபேசி கட்டணங்கள், தற்போதைய விலையை விட, 5 முதல் 10 மடங்கு விலை உயர வாய்ப்புள்ளது.
அதாவது ஒரு செல்பேசிக்கு மாதம் ஆயிரம் ருபாய் இணைப்புக்கட்டணமும், அதன் பின் உபயோகத்திருக்கு தனிக்கட்டணமும் அதாவது சாதாரண அளவில் ஒரு நாள் குறைந்த பட்சமாக ரூ 100.00.வரை ஒரு செல்பேசிக்கு செலவாகும் என தற்போதைய தகவல்கள் கூறுகின்றன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.