மனித வரலாற்றிலேயே முதல்முறையாக 20ஆயிரம் கோடி டாலர் இழப்பைச் சந்திக்கும் முதல் மனிதர் டெஸ்லா, ட்விட்டர் நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் என்று ப்ளூம்பெர்க் செய்தி தெரிவித்துள்ளது.
மனித வரலாற்றிலேயே முதல்முறையாக 20ஆயிரம் கோடி டாலர் இழப்பைச் சந்திக்கும் முதல் மனிதர் டெஸ்லா, ட்விட்டர் நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் என்று ப்ளூம்பெர்க் செய்தி தெரிவித்துள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பின்படி எலான் மஸ்க் ரூ.16.55 லட்சம் கோடி இழப்பை சந்திக்க உள்ளார்.
2021ம் ஆண்டில் எலான் மஸ்க் சொத்து மதிப்பு 200 கோடி டாலருக்கு மேல் உயர்ந்தது.இதன் மூலம் 200 கோடி டாலருக்கு மேல் சொத்து வைத்திருக்கும் 2வது தனிநபர் என்ற பெருமையை எலான் மஸ்க் பெற்றார். முதலிடத்தில் அமேசான் நிறுவனர் ஜெப் பிஜோஸ் இருந்தார்
NDTV கெளதம் அதானியின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது: 64.71 % பங்குகளுடன் கைப்பற்றினார்
ஆனால், அனைவரையும் முறியடித்த எலான் மஸ்க் 2021ம் ஆண்டு நவம்பரில் சொத்து மதிப்பு 34000 கோடி டாலராக அதிகரித்தது. பிரான்ஸ் நாட்டு கோடீஸ்வரர் பெர்நார்ட் அர்னால்டை முறியடித்து முதலிடத்தை மஸ்க் பிடித்தார்.
ஆனால், ட்விட்டரை நிறுவனத்தை வாங்கியது, கடந்த சில வாரங்களாக டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு குறைந்து வருவதால், எலான் மக்ஸ் சொத்து மதிப்பு 13700 கோடி டாலராகக் குறைந்துவிட்டது. கடந்த 27ம் தேதி மட்டும் டெஸ்லா நிறுவனப் பங்குள் மட்டும் 11 சதவீதம் சரிந்தது.
இதையடுத்து, டெஸ்லா நிறுவனம் தனது உயர் ரக கார்களுக்கு 7500 டாலர் தள்ளுபடியுன் வழங்கவும் முன்வந்துள்ளது. ஷாங்காய் நகரிலும் டெஸ்லா கார் உற்பத்தியையும் எலான் மஸ்க் குறைத்துள்ளார்.
8 சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி உயர்வு!PPF, செல்வமகள் திட்டம் கைவிரிப்பு
கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் 4400 கோடி டாலருக்கு விலைக்கு வாங்கினார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக தனது டெஸ்லா நிறுவனத்தின் பெரும் பங்குகளை சந்தையில் எலான் மஸ்க் விற்பனை செய்தார். இதனால் எலான் மஸ்கிற்கு அவரின் சொத்துமதிப்பில் பெரும்பகுதி குறைந்தது
இது தவிர டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து சரிந்து வந்ததால் நிகர சொத்து மதிப்பு எலான் மஸ்கிற்கு சரிந்து வந்தது. இதனால் உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருந்த எலான்மஸ்க் 2வது இடத்துக்கு சறுக்கினார். இப்போது, அதிகபட்சமாக 20ஆயிரம் கோடி இழப்பை சந்திக்க உள்ளமுதல் மனிதராகவும்எலான் மஸ்க் ஆக உள்ளார் என்று ப்ளூம்பெர்க் செய்தி தெரிவித்துள்ளது.