
Elon Musk: elon musk india இறக்குமதி செய்யப்பட்ட டெஸ்லா கார்களை விற்கவும், சர்வீஸ் செய்யவும் அனுமதிக்காதவரை இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் அமைக்கப்படாது என்று டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்தார்.
குற்றச்சாட்டு
டெஸ்லா நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்க் தனது டெஸ்லா கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார். பெங்களூரு நகரில் டெஸ்லா தொழிற்சாலை அமைக்கவும் எலான் மஸ்க் திட்டமிட்டிருந்தார். ஆனால், ஆனால், எலெக்ட்ரிக் வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியைக் குறைக்க வேண்டும் என்று எலான் மஸ்க் நிபந்தனை விதித்தார். இந்தியாவில் கார் தொழிற்சாலை அமைக்க டெஸ்லா நிறுவனம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது என்று எலான் மஸ்க் குற்றம்சாட்டினார்.
நிதின் கட்கரி பதில்
இதற்கு பதில் அளித்த மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, “இந்தியாவில் எலான் மஸ்க் தன்னுடைய டெஸ்லா கார்களை விற்பனை செய்வதை வரவேற்கிறோம். ஆனால், எலான் மஸ்க் தன்னுடைய டெஸ்லா கார்களை இந்தியாவில் தயாரிக்க வேண்டும். இந்தியாவில் தயாரித்தால் மட்டுமே டெஸ்லா கார்களை இந்தியாவில் விற்க முடியும். சீனாவில் தயாரிக்கப்பட்ட காரை இந்தியாவில் விற்பனை செய்ய முடியாது.
திட்டவட்டம்
எலான் மஸ்கிற்கின் எண்ணம் என்பது சீனாவில் டெல்லா கார்களை தயாரிக்க வேண்டும் அதை இந்தியாவில் விற்க வேண்டும். நாங்கள் எலான் மஸ்கிற்கிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால், இ்ந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலையைத் தொடங்குங்கள், உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இங்கு உள்ளன. தரமான உற்பத்தியைத் தொடங்கலாம், விற்பனையும் செய்யலாம். இந்தியாவில் டெஸ்லா கார் தொழிற்சாலையைத் தொடங்கினால் உங்களை வரவேற்கிறோம், ஆனால், சீனாவில் கார்களைத் தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்வது ஜீரணிக்க முடியாத விஷயம்” எனத் தெரிவித்தார்
நிபந்தனை
இந்நிலையில் ட்விட்டரில் தனிநபர் ஒருவர் “ இந்தியாவில் டெஸ்லா கார் தொழிற்சாலையை எதிர்காலத்தில் அமைக்கும் திட்டம் இருக்கிறதா” எனக் கேள்வி எழுப்பிஇருந்தார்.
இதர்கு எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார். அதில் “ டெஸ்லா நிறுவனத்தின் கார்களை விற்பனை செய்வதற்கும், கார்களின் சர்வீஸ்களுக்கும் அனுமதி வழங்காதவரை எந்த நாட்டிலும், எந்த இடத்திலும் டெஸ்லா நிறுவனம் தனது தொழிற்சாலையை அமைக்காது” எனத் தெரிவித்தார்.
இந்திய அரசுக்கும், டெஸ்லா நிறுவனத்துக்கும் இடையே தொழிற்சாலையை அமைப்பது, இறக்குமதி வரி தொடர்பாக இழுபறி நீடித்துவரும் நிலையில் எலான் மஸ்க் இப்படிஒரு பதிலைத் தெரிவித்துள்ளார். இதற்கு மத்திய அரசு சார்பில் என்ன எதிர்வினையாற்றப்போகிறதோ தெரியவில்லை
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.