lic price: அம்போ!எல்ஐசி பங்குவாங்கியவர்கள் கதி.. ; சந்தை மதிப்பு ரூ80 ஆயிரம் கோடி சரிவு

By Pothy RajFirst Published May 28, 2022, 11:27 AM IST
Highlights

lic price :எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதன் வெளியீட்டு விலையிலிருந்து ரூ.80ஆயிரம் கோடி சரிந்துள்ளதால்,  பங்குகளை வாங்கியவர்கள் நிலை பரிதாபத்துக்குள்ளாகியுள்ளது. 

எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதன் வெளியீட்டு விலையிலிருந்து ரூ.80ஆயிரம் கோடி சரிந்துள்ளதால்,  பங்குகளை வாங்கியவர்கள் நிலை பரிதாபத்துக்குள்ளாகியுள்ளது. 

மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்தின் பங்கு வாங்கினால் லாபம்கிடைக்கும் என்று எண்ணி வாங்கியவர்கள் நிலைமை தலையில் கைவைக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.

மத்தியஅரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 100 சதவீதப் பங்குகளில் 3.5 சதவீதப் பங்குகளை விற்பனை செய்தது. இதன் மூலம் ரூ.21 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு நினைத்தது.  எல்ஐசி ஐபிஓவுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 3 மடங்கு ஆதரவு குவிந்தது. இதையடுத்து, எல்ஐசி நிறுவனத்தின் 31.6 கோடி பங்குகள் ஒரு பங்கு ரூ.949க்கு விற்கப்பட்டது. இதில் ஊழியர்களுக்கு 5 சதவீதம், தனிநபர் காப்பீடுதாரர்களுக்கு 10 சதவீதம் ஒதுக்கப்பட்டது. தள்ளுபடியும் வழங்கப்பட்டது.

எல்ஐசி ஐபிஓ விற்பனை மூலம் மத்திய அரசு எதிர்பார்க்காத வகையில் ரூ.20ஆயிரத்து 560 கோடி கிடைத்துள்ளது. இந்தியப் பங்குச்சந்தையில் இதுவரை நடந்த ஐபிஓவில் இவ்வளவு பெரிய முதலீடு குவிந்தது இல்லை.

இதையடுத்து, எல்ஐசி பங்குகள் கடந்த 17ம் தேதி பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு. எல்ஐசி பங்கு விற்பனையைவிலையை விட 8ச தவீத் குறைவாக ஒரு பங்கு ரூ.867க்கு விற்பனைக்கு வந்தது. எல்ஐசி  பங்குகள் மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்ட நிலையில் ரூ.5.57 லட்சம் கோடியாகக் குறைந்தது. 

அடுத்தடுத்து வரும் நாட்களில் எல்ஐசி பங்குகள் மீது லாபம் கிடைக்கும், நீண்ட காலநோக்கில் லாபம் ஈட்டலாம்  யாரும் அவசரப்பட்ட விற்கவேண்டாம் என்று அரசு தரப்பில் முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் எல்ஐசி முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரூ.6 லட்சத்து 242 கோடியாக இருந்த எல்ஐசி பங்கு மதிப்பு, ரூ.42 ஆயிரத்து 500 கோடி குறைந்து, ரூ.5 லட்சத்து 57ஆயிரதத் 675 கோடியாகக் குறைந்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை(நேற்று) வர்த்தகம் முடிவில் எல்ஐசி நிறுவனத்தின் பங்கு மதிப்பு மேலும் சரிந்து ரூ.5 லட்சத்து 19ஆயிரத்து 630 கோடியாகக் குறைந்தது. அதாவது, எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.80ஆயிரத்து 600 கோடி குறைந்தது. ஏறக்குறைய முதலீட்டாளர்களுக்கு ரூ.80ஆயிரத்துக்கும் அதிகமான கோடி இழப்பு ஏற்பட்டது. தள்ளுபடி செய்து லிஸ்டிங் செய்யப்பட்டதால் ரூ.38ஆயிரத்து 45 கோடியும் இழப்பு ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவில் எல்ஐசி பங்கு ரூ.821.55 என்ற விலையில் ஐபிஓ விலையைவிட 13.5 சதவீதம் குறைந்து விற்பனையானது. லிஸ்டிங் விலையை விட 5.2 சதவீதம் குறைந்தது. எல்ஐசி சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதிகபட்சமாக பங்குவிலை ரூ.920 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.801.55 ஆகவும் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
 

click me!