அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டத்தில், மாதம் ரூ.3000 கிடைக்கிறது. அதை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம்.
அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டத்தில், மாதம் ரூ.3000 கிடைக்கிறது. அதை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம்.
அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகின்றன. பதிவுசெய்யப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் இத்திட்டங்கள் மூலம் பயன்பெறலாம். அமைப்புசாரா தொழிலாளர்கள் முதலில் அரசு இ-ஷ்ரம் (E-Shram) கார்டைப் பெற வேண்டும்.
16 வயது முதல் 59 வயது வரை உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் இ-ஷ்ரம் கார்டு பெற விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் eshram.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்யலாம்.
பாப்கான் மூளை தெரியுமா? எப்போதும் ஸ்கிரீன் பார்த்துட்டே இருக்குறவங்க இதை தெரிஞ்சுகோங்க!!
இணையதளத்தில் உங்களால் பதிவு செய்ய முடியவில்லை என்றால், அரசு இ-சேவை மையம் அல்லது CSC மையத்திற்குச் சென்று பதிவு செய்யலாம். இ-ஷ்ரம் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது ஆதார் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், வங்கி பாஸ்புக் ஆகியவை அவசியம்.
இ-ஷ்ரம் கார்டு அமைப்புசாரா தொழிலாளர்களின் ஐடி கார்டு போல கருதப்படுகிறது. இந்த கார்டு பெற்ற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 60 க்குப் பின் மாதம் ரூ.3000 பென்ஷன் வழங்கப்படும் ரூ. 2 லட்சம் விபத்து வரை காப்பீடும் கிடைக்கும். ஒரு தொழிலாளர் பணியில் இருக்கும்போது விபத்து ஏற்பட்டு இறந்தால், அவரது குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். விபத்தில் தொழிலாளி ஊனமுற்றால், அவருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவுசெய்தால் UAN நம்பரும் வழங்கப்படும். இதை பயன்படுத்தி மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் மூலம் பலன் அடையலாம். நாடு முழுவதும் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த வசதிகள் அனைத்தும் இலவசம் தான்... ரயிலில் பயணம் செய்யும் போது மறக்க யூஸ் பண்ணிக்கோங்க!