Post office Savings Scheme | அதிக வட்டி விகிதம் தரும் 3 சேமிப்பு திட்டங்கள் இதுதான்!

By Dinesh TG  |  First Published Jul 22, 2024, 5:21 PM IST

Super Savings Schemes on Post office | சேமிப்பு, முதலீடு என்றாலே பலரும் நாடுவது, அல்லது நினைப்பது வங்கியை தான். ஆனால், வங்கியை விட அதிக வட்டி விகிதம் தரும் 3 தரமான அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் குறித்து இதில் பார்க்கலாம்.
 


ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடித போக்குவரத்திற்காக தொடங்கப்பட்ட அஞ்சல் துறை, நாளடைவில் வளர்ச்சியடைந்து பல்வேறு நிதி சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. நீண்டகால வைப்பு நிதியை முதலீடு செய்ய மக்கள் வங்கிகளையே தேடுகின்றனர். ஆனால் வங்கிகளை விட அதிகம் வட்டியை அஞ்சல்துறை சேமிப்பு திட்டங்கள் தருகின்றன.

Mahila Samman Savings Scheme | மகிளா சம்மான் சேமிப்புத்திட்டம் : பெண்களின் சேமிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் அஞ்சல் அலுவலகங்களில் வழங்கப்படும் பிரத்யேக திட்டம் தான் இது. இரண்டு ஆண்டுகள் லாக்கின் பீரியன் கொண்ட இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.5% சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மற்ற திட்டங்களோடு ஒப்பிடுகையில் இந்த மகிளா சம்மான் சேமிப்புத்திட்டம் திட்டம்தான் குறுகிய கால சேமிப்பிற்கு அதிக வட்டி தரும் ஒரே திட்டமாகும்.

National Savings Schemes | தேசிய சேமிப்பு கால வைப்பு திட்டம் : FD பிக்சட் டெப்டாசிட் எனப்படும் நிலையான வைப்பு தொகையை சேமித்து அதன் மூலம் வட்டி பெற நினைக்கும் ஏராளமான பொதுமக்கள் வங்கிகளையே நாடுகின்றனர். அரசு மற்றும் தனியார் வங்கிகளை காட்டிலும் அஞ்சல் துறையில் உள்ள தேசிய சேமிப்பு கால வைப்பு திட்டம் மூலம் அதிகம் வட்டி பெற இயலும் என்பது பெரும்பாலானோருக்கு தெரிவது இல்லை. இந்த முறை அஞ்சல் அலுவலகங்களில் Time Deposit என அழைக்கப்படுகிறது.

ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை பணத்தை முதலீடு செய்து, ஒரு ஆண்டுக்கு 6.9% வட்டியும், அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு 7.5% வட்டியும் பெற முடியும். இத்திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதன் மூலம் வருமான வரிச்சட்ட பிரிவு 80C-ன் கீழ் ரூ.1.5 லட்சம்வரை வரி விலக்கு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Sr Citizen Saving Scheme | மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டம் : 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத்திட்டத்தில் அஞ்சலக துறை அதிக சலுகைகளை வழங்குகிறது. சேமிப்புத் திட்டங்களிலேயே மூத்த குடிமக்கள் திட்டத்திற்கு தான் அதிக வட்டிவிகிதம் வழங்கப்படுகிறது.

குறைந்தது ரூ.1000ம், அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரையும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். வட்டி தொகை ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒருமுறை, உங்களது சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும். இதன் வட்டி விகிதம் அதிகபட்ச வட்டிவிகிதமான 8.2% என்பது குறிப்பிடத்தக்கது. முதிர்வு காலமான 5 ஆண்டுகளுக்கு முன்னரோ அல்லது முதல் ஆண்டிலேயே திட்டத்தை விட்டு வெளியேற நினைத்தால் வட்டி வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சல் துறை திட்டங்கள் பற்றி கூடுதல் தகவல்களுக்கு அருகில் உள்ள தபால் அலுவலகத்திற்கு உதவியாரை அனுகவும்.
 

click me!