சிறுவயதிலிருந்தே இந்தத் திட்டத்தில் உங்கள் மாதாந்திர சேமிப்பில் இருந்து சில தொகையைச் சேமித்து, ஒழுங்கான முறையில் முதலீடு செய்தால், உங்களுக்கு பெரிய வருமானம் கிடைக்கும்.
தேசிய ஓய்வூதிய முறை என்பது ஒரு ஓய்வூதியத் திட்டமாகும். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு நல்ல ஓய்வூதியம் உங்களுக்கு கிடைக்கும். ஒரு நாளைக்கு வெறும் 100 ரூபாயை சேமிப்பதன் மூலம், ஓய்வூதியமாக 40 லட்சம் ரூபாய் மற்றும் ஒவ்வொரு மாதமும் 50 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். இதில் ஓய்வூதியத்தை மனதில் வைத்து முதலீடு செய்யப்படுகிறது. 18 முதல் 70 வயது வரை உள்ள எந்த இந்திய குடிமகனும் (அரசு ஊழியர் அல்லது தனியார் துறை ஊழியர்) தேசிய ஓய்வூதிய அமைப்பில் கணக்கைத் தொடங்கலாம்.
NRI களும் இதற்குத் தகுதியானவர்கள். கணக்கைத் திறந்த பிறகு, ஒருவர் 60 வயது வரை அல்லது முதிர்ச்சி அடையும் வரை அதாவது 70 வயது வரை பங்களிக்க வேண்டும். NPS இன் ரிட்டர்ன் ஹிஸ்டரியைப் பார்த்தால், இதுவரை 8% முதல் 12% ஆண்டு வருமானம் கொடுத்துள்ளது. முதலீடு தொடங்க வயது 25 ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு மாதமும் என்பிஎஸ் (NPS) முதலீடு ரூ 3000 ஆகும். 35 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ 12,60,000 (ரூ 12.60 லட்சம்) ஆகும். முதலீட்டின் மதிப்பிடப்பட்ட வருமானம் ஆண்டுக்கு 10 சதவீதம் கிடைக்கும்.
இதன் மூலம் கிடைக்கும் மொத்த கார்பஸ் ரூ 1,14,84,831 (ரூ 1.15 கோடி) ஆகும். இந்த மொத்த மதிப்புரூ 40,19,691 (ரூ 40.20 லட்சம் கோடி). ஓய்வூதியம் பெறக்கூடிய சொத்து ரூ 74,65,140 (ரூ 74.65 லட்சம்) ஆகும். வருடாந்திர வருமானம் 8 சதவீதம் ஆகும். மாதாந்திர ஓய்வூதியம் ரூ 49,768 (சுமார் ரூ 50 ஆயிரம்) ஆகும். நீங்கள் என்பிஎஸ்ஸில் டெபாசிட் செய்த தொகையின் ஒரு பகுதி ஈக்விட்டியில் முதலீடு செய்யப்படுவதால், இந்தத் திட்டத்தில் உத்தரவாதமான வருமானத்தைப் பெற முடியாது. இருப்பினும், பிபிஎஃப் போன்ற பிற பாரம்பரிய நீண்ட கால முதலீடுகளை விட இது இன்னும் அதிக வருமானத்தை அளிக்கும்.
NPS இன் ரிட்டர்ன் ஹிஸ்டரியைப் பார்த்தால், இதுவரை 9% முதல் 12% ஆண்டு வருமானம் கொடுத்துள்ளது. NPS இல், ஃபண்டின் செயல்திறனில் நீங்கள் திருப்தி அடையவில்லை என்றால், உங்கள் ஃபண்ட் மேனேஜரை மாற்றுவதற்கான விருப்பமும் உங்களுக்கு வழங்கப்படும். தற்போது, ஒரு நபர் மொத்த தொகையில் 60 சதவிகிதம் வரை திரும்பப் பெறலாம், மீதமுள்ள 40 சதவிகிதம் வருடாந்திர திட்டத்திற்கு செல்கிறது. புதிய NPS வழிகாட்டுதல்களின்படி, மொத்த கார்பஸ் ரூ. 5 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், சந்தாதாரர்கள் வருடாந்திரத் திட்டத்தை வாங்காமலேயே முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம். இந்த திரும்பப் பெறுதல்களும் வரியில்லாவை.
20 ஆயிரம் மட்டும் போதும்.. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டலாம்.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே!