Online application process for Patta | பட்டா வாங்கும் நடைமுறையை அரசு மிக எளிமையாக்கியுள்ளது. சோதனை முறையில் சில பகுதிகளில் நடைமுறைப்படுத்தியும் வருகிது. இனி ஆன்லைன் முறையில் பட்டாவை ஒரே நிமிடத்தில் பெற்று விடலாம்.
வீட்டை கட்டிப்பார்.... கல்யாணம் பண்ணிப்பார்..என்று பழமொழியும் உண்டு. வளர்ந்து வரும் பொருளாதார நெருக்கடியான காலத்தில் ஒருவர் தனக்கான வீடு கட்டுவது என்பது பெரும்கனவாகவே உள்ளது. சம்பாதித்த பணத்தை எல்லாம் முதலீடு செய்து நிலம் வாங்கி பதிவு செய்யும் பொழுது அதற்கான வழிமுறைகள் ஒன்றல்ல, இரண்டல்ல, பல்வேறு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அவற்றை ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்வதற்கு பலநாட்கள் கூட ஆகலாம்.
ஒரு நிமிட பட்டா
இந்நிலையில், பத்திரப்பதிவு செய்த இடங்கள், வீட்டுமனைகளுக்கு விரைவாக பட்டா வழங்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு ஒரு புதிய வழிமுறையில் கொண்டுவந்துள்ளது. அதன் பெயர் தான் ஒரு நிமிடப்பட்டா. இதன் மூலம் ஒரே நிமிடத்தில் உங்களுக்கான வீட்டுமனைப் பட்டா பெற்று விடலாம்.
அனைத்தும் ஆன்லைன் முறையாகிவிட்ட நிலையில், பட்டா வழங்கும் முறையையும் அரசு ஆன்லை மயமாகி வருகிறது. இத்திட்டத்திற்கான 80 % சதவீத பணிகள் முடிபெற்றுவிட்டதாகவும், தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் இதற்கான முன்னோட்ட சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆன்லைன் மூலம் பட்டா, சிட்டா ஆவணங்களை டவுன்லோட் பண்ணலாம்! இதுதான் சிம்பிள் வழி!
பட்டா! - விண்ணப்பிப்பது எப்படி?
உங்கள் இடங்கள் அல்லது வீட்டுமனைக்கு இந்த ஒரு நிமிட பட்டா பெற வேண்டுமா? கீழ்காணும் தகவல்களை கையோடு வைத்துக்கொண்டு வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
நீங்கள் பட்டா பெற விரும்பினால் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற இணையதள பக்கத்தை திறக்க வேண்டும். பெயர், கைபேசி எண், முகவரி ஆகியவற்றை உள்ளிட வேண்டும். பட்டா மாறுதல் கோரும் எந்த ஒரு குடிமகனும் ஒரு நிமிட பட்டா கேட்டு விண்ணப்பிக்கலாம்"
உட்பிரிவுள்ள இனங்கள், உட்பிரிவு அல்லாத இனங்கள் இவற்றில் எது உங்கள் இடத்திற்கான வகை என்பதை கண்டறிந்து உள்ளிட வேண்டும். அதோடு, 1. கிரையப் பத்திரம், 2. செட்டில்மென்ட் பத்திரம், 3. பாகப்பிரிவினை பத்திரம், 4. தானப் பத்திரம், 5. பரிவர்தனை பத்திரம், 6.அக்குவிடுதலைப் பத்திரம் ஆகியவற்றை சேர்த்து உள்ளிட வேண்டும்.
பட்டா மாறுதல்,நில அளவைக்கு எந்த வெப்சைட்டில் விண்ணப்பிக்கனும் தெரியுமா.?தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இந்த ஒரு நிமிடப் பட்டா பெற ஒரு நிபந்தனை உண்டு. உட்பிரிவு அல்லாத இனங்களின் கீழ் பதிவு செய்யப்படும் நிலங்கள் அல்லது வீட்டுமனைக்கு ஒரு நிமிடப்பட்டா இணையத்தில் உருவாக்கப்பட்டு விடும். எளிதில் பெற்றுக்கொள்ளலாம்.