donkey milk price: என்னது! ஒரு கிலோ பனீர் ரூ.85 ஆயிரமா! உலகிலேயே அதிக விலையா: அப்படி என்ன சிறப்பு

By Pothy Raj  |  First Published Jun 30, 2022, 12:43 PM IST

ஒட்டகப்பாலில் டீ போடுப்பானு நடிகர் வடிவேலு டயலாக் பேசி சினிமாவில் கேட்டிருப்போம். ஆனால், ஒட்டப்பாலைக் காய்ச்சி, தயிர், மோர், பனீர் எடுத்தால்கூட இந்த விலை விக்காதுங்க! ஆமாம்… ஒரு கிலோ பனீர் விலை ரூ.85ஆயிரமாம்.


ஒட்டகப்பாலில் டீ போடுப்பானு நடிகர் வடிவேலு டயலாக் பேசி சினிமாவில் கேட்டிருப்போம். ஆனால், ஒட்டப்பாலைக் காய்ச்சி, தயிர், மோர், பனீர் எடுத்தால்கூட இந்த விலை விக்காதுங்க! ஆமாம்… ஒரு கிலோ பனீர் விலை ரூ.85ஆயிரமாம்.

ஜிஎஸ்டி வரி உயர்வால் விலை உயரும் பொருட்கள்: இதோ முழுமையான பட்டியல்

Tap to resize

Latest Videos

நகைக்கடையில தங்கம் விக்கிறது மாதிரித்தான் பனீர் விக்கிறாங்க. அப்படி என்ன இந்த பனீரில் விஷேசம். ஏன் இந்த விலைனு தெரிஞ்சுக்கலாம்.

உலகிலேயே மிகவும் விலை அதிகமான இந்த பனீர், சீ்ஸ் யூரோ மதிப்பில் கிலோ 800 முதல் 1000 யூரோ என விற்கப்படுகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.82ஆயிரம். இன்றைய நிலவரப்படி உலகிலேயே மிக அதிகமான விலை மதிப்புள்ள பனீர் இதுவாகத்தான் இருக்க முடியும் என டெய்லி மெயில் நாளேடு தெரிவி்த்துள்ளது.

இலங்கையில் 2022ம் ஆண்டுக்குள் உணவு இல்லாமல் போகலாம்! தபால் சேவை நாட்களும் குறைப்பு

இந்த சீஸ், பனீர், மாட்டுப் பாலிலோ, ஆட்டுப் பாலிலோ, ஒட்டகப் பாலிலோ தயாரிக்கப்படவில்லை. அப்படி தயாரிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் விலைகுறைவாக இருந்திருக்கும். இந்த சீஸ், பனீர் முழுக்க ‘கழுதைப் பாலில்’ தயாரிக்கப்பட்டது. தும்பைப்பூ போன்ற வெண்மை, கீரீமியாக கழுதைப்பாலில் எடுக்கப்பட்ட சீஸ் இருக்கிறது. 

உலகிலேயே அதிக சுவை கொண்ட் சீஸ் ஸ்பெயினின் ‘மான்சிகோ சீஸ்தான்’. அந்த சீஸின் சுவை, மனம் உள்ளத்தை அள்ளும். பிரிட்டனில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் ஸ்பெயினின் ‘மான்செகோ சீஸ்’ கிடைக்கும். விலை 13 யூரோதான். மிகவும் சுவையான, தரமான ஸ்பெயின் சீஸ், விலை குறைவுதான். ஆனால் கழுதைப்பாலில் எடுக்கப்பட்ட பனீர், சீஸுக்கு மட்டும் ஆயிரக்கணக்கில் விலை.

செர்பியாவில் உள்ள ஜஸாவிகாவில் உள்ள கழுதைப் பண்ணையில்தான் கழுதை சீஸ், கழுதை பனீர் என கழுதைப் பாலில் தாயாரிக்கப்படுகிறது. அந்த பண்ணை நிர்வாகம் கூறுகையில் “ ஒருகிலோ சீஸ் எடுக்க, 25 லிட்டர் கழுதைப் பால் தேவைப்படுகிறது” என்று தெரிவிக்கிறது

பாட்டிலில் அடைத்தும் கழுதைப் பாலை இந்த பண்ணை நிர்வாகம் விற்கிறது. எகிப்து ராணி கிளியோபாட்ராவின் அழகின் ரகசியமே கழுதைப்பாலில் குளிப்பதுதான் என்பது தெரியுமா.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை1 முதல் தடை: பட்டியல் தெரியுமா?

உலகிலேயே அதிக விலை கொண்ட உணவான இத்தாலியின் ‘ட்ரூப்லெஸ்’, ‘வாக்யு பீப்’ ஆகியவற்றோடு கழுதை சீஸ், பனீரும் இடம் பெற்றுவிட்டது. 

ஸ்வீடன் நாட்டின் ‘மூஸ் சீஸும்’, கழுதைப் பால் சீஸ் போன்று  விலை உயர்ந்தது. ‘மூஸ் சீஸ்’ ஒருகிலோ 630 யூரோக்கள். 
அதுமட்டுமல்லால் இத்தாலியின் அரிதான பசுக்களின் பாலில் இருந்து எடுக்கப்படும் ‘காசியோகாவாலோ போடலிகோ’ என்ற சீஸும் விலை உயர்ந்தது. இத்தாலியின் இந்த அரிதான மாட்டினங்கள் மே, ஜூன் மாதங்களில் மட்டுமே பால் சுரக்கும். மற்ற மாதங்களில் பால் சுரக்காது என்பதால் அரிதானது


 

click me!