bank holidays in july 2022: RBI:ஜூலையில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை: பட்டியலை வெளியிட்டது RBI

By Pothy Raj  |  First Published Jun 30, 2022, 12:12 PM IST

ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு மாநில விடுமுறை, வார விடுமுறை, பண்டிகை நாட்கள் என மொத்தம் 14 நாட்கள் விடுமுறை வருகிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு மாநில விடுமுறை, வார விடுமுறை, பண்டிகை நாட்கள் என மொத்தம் 14 நாட்கள் விடுமுறை வருகிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதில் வார விடுமுறை நாட்களும் அடங்கும். 

ஆபரணத் தங்கம் விலை உயர்வா? சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

Tap to resize

Latest Videos

சில விடுமுறை நாட்கள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும் என்றாலும், பொதுவிடுமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். சில மாநிலங்களில் நடக்கும் சிறப்பு விழாக்களுக்காக வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.

மாநிலம்

பண்டிகை

தேதி

ஒடிசா, மணிப்பூர்

காங் ரதயாத்திரை

ஜூலை 1 வெள்ளி

திரிபுரா

கார்ச்சி பூஜா

ஜூலை 1 வியாழன்

ஜம்மு காஷ்மீர்

ஈத் உத் அஸா

ஜூலை11 திங்கள்

சிக்கிம்

பானு ஜெயந்தி

ஜூலை 13 புதன்

மேகாலயா

பெய் தீன்கலாம்

ஜூலை 14 வியாழன்

உத்தகாண்ட்

ஹரேலா

ஜூலை 16 சனி

திரிபுரா

கேர் பூஜா

ஜூலை 26 செவ்வாய்

குறிப்பாக காங் ரத யாத்திரை, கார்ச்சி பூஜா, பக்ரீத், ஈத் உல் அஸா, பானு ஜெயந்தி, பெய் தீன்கலாம், ஹரேலா, கேர் பூஜா ஆகிய பண்டிகைகள் வருகின்றன. இந்த பண்டிகைகள் தவிர 7 வார நாட்கள் விடுமுறை வருகின்றன. ஆக மொத்தம் 14 நாட்கள் ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. வங்கிகளின் விடுமுறை காலத்தில் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் சேவை ்அல்லது மொபைல் பேங்கிங் ஆகியவை மூலம் தங்களின் பரிமாற்றத்தில் ஈடுபடலாம். 

இதெல்லாம் மாறப்போகுது! ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கும் மாற்றங்கள் என்ன?

வார விடுமுறை நாட்கள்

 

  • ஜூலை-3: முதல் ஞாயிறு
  • ஜூலை-9: 2-வது சனிக்கிழமை
  • ஜூலை-10: 2வது ஞாயிறு
  • ஜூலை 17: 3-வது ஞாயிறு
  • ஜூலை23: 4-வது சனிக்கிழமை
  • ஜூலை 24: 4-வது ஞாயிறு
  • ஜூலை 31: 5-வது ஞாயிறு
click me!