ரூ. 55,000 கோடி அளவிற்கு சரக்கு மற்றும் சேவை வரி பாக்கி வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!!

Published : Sep 26, 2023, 04:10 PM ISTUpdated : Sep 26, 2023, 05:08 PM IST
ரூ. 55,000 கோடி அளவிற்கு சரக்கு மற்றும் சேவை வரி பாக்கி வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!!

சுருக்கம்

சுமார் ரூ. 55,000 கோடி அளவிற்கு சரக்கு மற்றும் சேவை வரி பாக்கி வைத்திருக்கும் 12 ஆன்லைன் ரியல் மணி கேமிங் (ஆர்எம்ஜி) நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் அனுப்பி இருக்கும் பட்டியலில் முதலில் இடம் பெற்று இருப்பது பேன்டசி விளையாட்டு தளமான ட்ரீம்11-ம் அடங்கும். இந்த் நிறுவனம் ரூ.25,000 கோடிக்கும் அதிகமாக ஜிஎஸ்டி பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை நாட்டில் இந்த அதிகளவிற்கு மறைமுக வரி பாக்கி வைத்திருக்கும் நிறுவனம் என்ற பட்டியலில் ட்ரீம்11 (Dream11) உள்ளது. 

வரும் வாரங்களில் மேலும் சில நிறுவங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தெரிய வந்துள்ளது. இந்த தொகை மட்டும் ஒரு லட்சம் கோடியை எட்டும் என்று கூறப்படுகிறது. அதிகாரிகளால் வழங்கப்படும் DRC-01 A படிவத்தின் மூலம் வரி செலுத்தப்பட வேண்டும். Play Games24x7 உள்பட பலருக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

ஆனால், இந்த நிறுவனங்கள் இதுவரை இதுகுறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்த நோட்டீசுக்கு எதிராக டிரீம்11 நிறுவனம் மட்டும் மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் சி.இ.ஓ.க்கள்: ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சு!

சமீபத்தில் ரியல் மணி கேம் தளங்களுக்கு வரி 28% அதிகரிக்கப்பட்டு இருந்தது. அதற்குப் பின்னர் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து எகனாமிக்ஸ் டைம்ஸ் இணையத்தில் வெளியாகி இருக்கும் செய்தியில், ''Dream11 நிறுவனம் 25,000 கோடி பாக்கி வைத்திருப்பதாக அந்த நிறுவனத்துக்கு திங்கள் கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. RummyCircle மற்றும் My11Circle Play உள்பட Games24x7 நிறுவனம் ரூ. 20,000 கோடி வரி பாக்கி வைத்திருப்பதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்குச் சந்தை போர்ட்ஃபோலியோவை எப்படி வடிவமைப்பது? தமிழ் சினிமாவும், ஷேர் மார்க்கெட்டும்!

இதற்கு முன்பாக கேம்ஸ்கிராஃப்ட் நிறுவனத்திற்கு 21,000 கோடி ரூபாய் வரி பாக்கி குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து அந்த நிறுவனம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது.  இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் ஆறாம் தேதி நிறுத்தி வைத்தது. மேலும் இந்த வழக்கு இந்த மாத இறுதியில் விசாரணைக்கு வருகிறது. கடந்த 16ஆம் தேதி கேம்ஸ்கிராஃப்ட் தனது கேம்ஸ் தளத்தை மூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பிக்சட் டெபாசிட்டுக்கு எந்த வங்கி அதிக வட்டி தருது தெரியுமா? முழு விபரம் உள்ளே!
Indigo: மீண்டும் நல்ல பெயர் எடுக்க முயற்சிக்கும் இண்டிகோ! கிஃப்ட் வவுச்சர், இழப்பீடு என தாராளம்.!