crude oil price: சர்வதேச கச்சா எண்ணெய் விலை 30 % சரிந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு இல்லை !

By Pothy Raj  |  First Published Oct 4, 2022, 3:19 PM IST

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 30 சதவீதம் குறைந்த நிலையிலும் கடந்த 6 மாதங்களாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் உள்ளன.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 30 சதவீதம் குறைந்த நிலையிலும் கடந்த 6 மாதங்களாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் உள்ளன.

சர்வதேச சந்தையில் கடந்த 4 வாரங்களாக கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. இந்த சரிவு காரணமாகத்தான் வர்த்தகரீதியான கேஸ் சிலிண்டர் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன, விமானங்களுக்கான ஏடிஎப் எரிபொருள் விலையையும் குறைத்தன.

Tap to resize

Latest Videos

ஆனால், சமானிய மக்கள் சமையலுக்குப் பயன்படுத்தும் 14.2 கிலோ சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலையையும் மட்டும் குறைக்கவில்லை.

எண்மெய் நிறுவனங்கள் இன்னும் இழப்பிலிருந்து மீளவில்லை என்பதால்தான் விலைக் குறைப்புசெய்யவில்லை. சர்வதேசசந்தையில் கச்சா எண்ணெய் விலை தினசரி மாறுகிறது, ஆதலால் உடனடியாக விலைக்குறைப்பை அமல் செய்ய முடியாது என்று எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ரிலையன்ஸ் ஜியோ லேப்டாப் வருது! இவ்வளவுதான விலை?

பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள்படி, “ சர்வதேச சந்தையில் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெயின் சராசரி விலை கடந்த ஜூன் மாதம் பேரல் 116 டாலராக இருந்தது. செப்டம்பர் மாதத்தில் 22சதவீதம் குறைந்து பேரல் 90.71 டாலராகச் சரிந்துவிட்டது.

சூதாட்ட இணையதள விளம்பரங்களைத் தவிருங்கள்: செய்தி இணையதளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

பெட்ரோலுக்கான கச்சா எண்ணெய் விலையும் 37 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் பேரல் 148.82 டாலராக இருந்த நிலையில், செப்டம்பரில் 93.72 டாலராகக் குறைந்துவிட்டது, டீசலுக்கு 28 சதவீதம் குறைந்துவிட்டது. கச்சா எண்ணெய் விலை ஜூன் மாதம் பேரல் 170.92 டாலராக இருந்தநிலையில், செப்டம்பரில் 123.36 டாலராகக் குறைந்துவிட்டது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ஐஓசி, பிபிசிஎல், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை பெட்ரோலுக்கு கு லிட்டருக்கு ரூ.3 முதல் 4 வரை லாபம் வைத்து விற்கின்றன. ஆனால், டீசலைப் பொறுத்தவரை இன்னும் லாபநிலையை எட்டவில்லை.

500 நாட்கள்; 25ஆயிரம் மொபைல் டவர்; ரூ.26,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரச ஒப்புதல்

இதற்கிடையே பொதுத்துறை நிறுவனங்களின் நிதிச்சூழலை ஆய்வு செய்தபின் அடுத்தகட்டமாக மத்திய அரசு முடிவு எடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

click me!