
பிரதமர் மோடியின் ரூ.1000, ரூ.500 நோட்டுக்கள் செல்லாத அறிவிப்பால், மக்கள் தங்கள் அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே பணத்தை கையில் வைத்துள்ளனர்.
ஸ்மார்ட் போன் போன்ற மின்னனு சாதனங்கள் வாங்க வேண்டுமென்றால் கூட வங்கியில் இருக்கும் தங்களுக்கு சொந்தமான பணத்தைக்கூட எடுக்க முடியவில்லை. இதையடுத்து ஸ்மார்ட் போன் விற்பனை மந்தமடைந்தது. இதைத் தொடர்ந்து புதிய திட்டத்தை செல்போன் விற்பனை நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளன.
அதாவது ஸ்மார்ட் போன் வாங்க வருபவர்கள் டவுன்பேமென்ட் ஏதும் செலுத்தாமல், அவர்களின் இ.எம்.ஐ. மட்டும் செலுத்தினால், போதுமானது எனக்கூறியுள்ளன. இதனால், முன்பனம் ஏதும் செலுத்த தேவையின்றி இ.எம்.ஐ. மட்டும் செலுத்தினால் போதும் என்பதால், விற்பனை சூடுபடித்துள்ளது.
இது குறித்து பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட சங்கீதா மொபைல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சுபாஷ் சந்திரா கூறுகையில், நாட்டில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு தென் இந்தியாவில் இருக்கும் எங்களின் அனைத்து கிளைகளிலும் ஸ்மார்ட்போன் விற்பனையின் போது வாடிக்கையாளர்களிடம் டவுன்பேமென்ட் கேட்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம்.
வாடிக்கையாளர்கள் நேரடியாக இ.எம்.ஐ. மற்றும் வரியுடன் சேர்த்து மாதம் தோறும் செலத்த மட்டும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அதிகபட்சமாக 30சதவீத விற்பனை மட்டும் ரொக்க பணப்பரிவர்த்தனை மூலம் ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திட்டத்தை அறிவித்தது முதல் ஸ்மார்ட் விற்பனை சூடுபிடித்துள்ளது என்று தெரிவித்தார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.