vauld news: போதும்டாசாமி! கிரிப்டோகரன்ஸி வர்த்தகம், டெபாசிட், திரும்பப்பெறுதலை நிறுத்திய வால்ட் நிறுவனம்

Published : Jul 05, 2022, 01:47 PM IST
vauld news: போதும்டாசாமி! கிரிப்டோகரன்ஸி வர்த்தகம், டெபாசிட், திரும்பப்பெறுதலை நிறுத்திய வால்ட் நிறுவனம்

சுருக்கம்

கிரிப்டோகரன்ஸி வர்த்தகம், திரும்பப்பெறுதல், டெபாசிட் என அனைத்தையும் நிறுத்துவதாக சிங்கப்பூரைச் சேர்ந்த கிரிப்டோ வர்த்தகத் தளமான வால்ட் நிறுவனம் திடீரென அறிவித்துளளது.

கிரிப்டோகரன்ஸி வர்த்தகம், திரும்பப்பெறுதல், டெபாசிட் என அனைத்தையும் நிறுத்துவதாக சிங்கப்பூரைச் சேர்ந்த கிரிப்டோ வர்த்தகத் தளமான வால்ட் நிறுவனம் திடீரென அறிவித்துளளது.

கோடக் மகிந்திரா, இன்டஸ்இன்ட் வங்கிகளுக்கு கடும் அபராதம்: ஆர்பிஐ அதிரடி: என்ன காரணம்?

கடந்த ஒரு மாதத்துக்கு 30 சதவீத ஊழியர்களை பணியிலிருந்து நீக்கிய வால்ட் நிறுவனம், இப்போது ஒட்டுமொத்த வர்த்தகம் அனைத்தையும் நிறுத்தியுள்ளது. கிரிப்டோ சந்தையில் சமீபத்தில் ஏற்பட்ட மோசமான சரிவுதான் வால்ட் நிறுவனத்தை இந்த முடிவை எடுக்க வைத்துள்ளது.

கிரிப்டோகரன்ஸிக்கான சந்தை கடந்த ஒரு மாதத்துக்கு மேலாகவே கடும் ஊசலாட்டத்துடன் இருந்து வருகிறது. பிட்காயின், டெரா, எத்திரியம் போன்றவற்றின் மதிப்பு கடுமையாகச் சரிந்துவிட்டதால், அதனால் ஏற்பட்ட இழப்பைச் சமாளிக்க முடியாமல் வோல்ட் நிறுவனம் மூடிகிறது.

அதுமட்டுமல்லாமல் கடுமையான நிதிச்சிக்கலையும் வோல்ட் நிறுவனம் சந்தித்து வருகிறது, மேலும், கிரிப்டோகரன்ஸி மதிப்பு சரிவால், முதலீட்டாளர்கள் முதலீட்டை தொடர்ந்து எடுத்துவருவது நிறுவனத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால், வோல்ட் நிறுவனம் தனது வர்த்தகத்தை நிறுத்துகிறது.

ஆசியப் பங்குச்சந்தைகள் திடீர் உயர்வு: என்ன காரணம்? சீனா மீதான கட்டுப்பாடுகள் நீக்கமா?

வோல்ட் நிறுவனத்தின் சிஇஓ தர்ஷன் பதிஜா கூறுகையில் “ கிரிப்டோசந்தையில் நிலவும் கடும் ஊசலாட்டம், எங்களின் நிதிப்பிரச்சினை போன்ற பல்வேறு காரணங்கள் எங்களை கடுமையாகப் பாதித்துள்ளன. குறிப்பாக கிரிப்டோ சந்தையில் ஏற்பட்ட கடும் சரிவால்,  ஜூன்12ம் தேதியிலிருந்து எங்களிடம் இருந்து 19.77 கோடி டாலர்களை முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர்.

முதலீட்டாளர்கள் நலன்கருதி, உடனடியாக நாங்கள் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. எங்களின் நிதிஆலோசகர், சட்ட ஆலோசகர்கள் கிரில் அமர்சந்த் மங்கல்தாஸ், ராஜா அன்ட் டான்சிங்கப்பூர்எல்எல்பி ஆகியோரின் ஆலோசனைப்படி தற்காலிகமாக வர்த்தகத்தை நிறுத்துகிறோம். எங்கள் நிறுவனத்தை மறு சீரமைப்புச் செய்து, எங்களின் முதலீட்டாளர்கள் நலன் காக்கப்படும் ” எனத் தெரிவித்தார்

கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவு ஐடிசி பங்குகள்விலை உயர்வு: 6 நாட்களில் 10% அதிகரிப்பு

இதனிடையே இந்தியாவில் கிரிப்டோகரன்ஸி பரிமாற்றத்துக்கும், விற்பனைக்கும் ஒரு சதவீதம் டிடிஎஸ் வரி, மற்றும் கிரிப்டோவருமானத்தின் மீது 30 சதவீதம் வரி போன்றவை முதலீட்டாளர்களை மேலும் கலக்கமடையச் செய்துள்ளது.

கிரிப்டோகரன்ஸி பரிவர்த்தனைக்கு ஒரு சதவீதம் டிடிஎஸ்(TDS), கிரிப்டோகரன்ஸி மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 30% வரி போன்ற புதிய கட்டுப்பாடுகளால் இந்தியாவில் கிரிப்டோகரன்ஸி வர்த்தகம் கடந்த 3 நாட்களில் 80 சதவீதம் சரிந்துள்ளது.


இந்தியாவில் செயல்படும் கிரிப்டோகரன்ஸி பரிமாற்ற நிறுவனங்களான ஜெப்பே(Zebpay), வாசிர்எக்ஸ், (wazirx), காயின்டிசிஎக்ஸ் (coinDCX) ஆகியவற்றின் வர்த்தகம் கடுமையாகச் சரிந்துள்ளது. அதாவது ஜெப்பே வர்த்தகம் வாசிர்எக்ஸ் , காயின்டிசிஎஸ்க் ஆகியவற்றின் வர்தத்கம் 67 சதவீதம் முதல்  87 சதவீதம் வரை குறைந்துள்ளது.

ஜியோட்டஸ் பரிமாற்ற நிறுவனத்தின் வர்தத்கமும் 70ச தவீதம் சரிந்துள்ளது. இதில் வாசிர்எக்ஸ் நிறுவனத்தின் வர்த்தகம் மட்டும் 82 சதவீதம் சரிந்துள்ளது, காயின்டிசிஎஸ் வர்த்தகம் 70%, ஜெப்பே வர்த்தகம் 76 சதவீதமும் குறைந்துள்ளது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Gold Rate Today (December 06): இதுதான் இன்றைய தங்கம் விலை.! விலை உயர என்ன காரணம் தெரியுமா?