சீனாவின் விவோ செல்போன் நிறுவனத்துக்குச் சொந்தமான 44 இடங்களில் அமலாக்கப்பிரிவு ரெய்டு நடத்தி வருகின்றனர்.
சீனாவின் விவோ செல்போன் நிறுவனத்துக்குச் சொந்தமான 44 இடங்களில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இன்று காலை முதல் ரெய்டு நடத்தி வருகிறார்கள். சீனாவைச் சேர்ந்த நிறுவனங்களின் பூர்வீகத்தைக் கண்டறியும் பணியில் இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த மே மாதம் விவோ கம்யூனகேஷன் நிறுவனம் பல்வேறு நிதி முறைகேடுகள் செய்ததாக விசாரணை நடத்தப்பட்டது. இது தவிர எம்ஐ நிறுவனமும் அமலாக்கப்பிரிவு கண்காணிப்பில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
கோடக் மகிந்திரா, இன்டஸ்இன்ட் வங்கிகளுக்கு கடும் அபராதம்: ஆர்பிஐ அதிரடி: என்ன காரணம்?
விவோ நிறுவனம் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த ரெய்டு நடத்தப்படுவதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரெய்டு குறித்து கருத்துத் தெரிவிக்க விவோ நிறுவனம் மறுத்துவிட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விவோ நிறுவனத்துக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தினர். இது தவிர ஓபோ,ஜியோமி, ஒன்பிளஸ் ஆகிய செல்போன் நிறுவனங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது.
இந்த ரெய்டுக்குப்பின் விவோ நிறுவனத்தை வருமானவரித்துறையினர், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், உள்துறை அமைச்சகம், கார்ப்பரேட் விவகாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
ஆசியப் பங்குச்சந்தைகள் திடீர் உயர்வு: என்ன காரணம்? சீனா மீதான கட்டுப்பாடுகள் நீக்கமா?
விவோ நிறுவனத்தில் அமலாக்கப்பிரிவு ரெய்டு நடத்தும் செய்தி வெளியானதையடுத்து, டிக்ஸன் டெக் பங்குகள் மதிப்பு 2 சதவீதம் சரிந்தது.
தங்கத்துக்கான இறக்குமதி வரி 5 % அதிகரி்ப்பு: காரணம் என்ன? தங்கக்கடத்தல் அதிகரிக்கும்?
கடந்த ஏப்ரல் 30ம் தேதி சீனாவின் ஜியோமி நிறுவனத்தில் அமலாக்கப்பிரிவு ரெய்டு நடத்தி, ரூ.5,551.27 கோடியை பறிமுதல் செய்தது. சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக இந்த ரெய்டு நடத்தப்பட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜியோமி நிறுவனத்தின் பெமா சட்டத்தின்படி இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்நிறுவனத்தின் இந்தியத் தலைவர் மனு ஜெயினை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தினர்.