அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியின் போது சீனா மீது விதிக்கப்பட்ட வர்த்தகரீதியான பல்வேறு தடைகளை அதிபர் ஜோ பிடன் அரசு நீக்கும் என்ற தகவல் எழுந்துள்ளது
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியின் போது சீனா மீது விதிக்கப்பட்ட வர்த்தகரீதியான பல்வேறு தடைகளை அதிபர் ஜோ பிடன் அரசு நீக்கும் என்ற தகவல் எழுந்துள்ளது
ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து 5வது நாளாக உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?
இதனால் ஆசியப் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் இன்று வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. ஹாங்காங், ஷாங்காய், டோக்கியோ, சியோல், தைப்பே, ஜகார்த்தா, சிட்னி, வெலிங்கடன், சியோல், மணிலா பங்குச் சந்தைகள் சாதகமாகத் தொடங்கியுள்ளன.
இந்தியப் பங்குச்சந்தையும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கி நடத்தி வருகிறது. சென்சென்க்ஸ் 600 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நடந்து வருகிறது. ஆசியச்ச ந்தைகளில் காணப்பட்ட சாதகமான போக்குதான் இந்தியச் சந்தையிலும் எதிரொலித்தது.
உலகஅளவில் பலநாடுகளில் கடும் பணவீக்கம் நிலவிவருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் பணவீக்கம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்து வருகிறது. இதனால் பணவீக்கத்தைச் சமாளிக்க அந்நாட்டு பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கடும் வரிவிதிப்பால், பல பொருட்களைஇறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்ய தயங்குகிறார்கள். இதனாலும் அந்தப் பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. இதையடுத்து, முன்னாள் அதிபர் ட்ரம்ப் ஆட்சியின் போது சீனாவின் பல்வேறு பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்ய அதிபர் ஜோ பிடன் அரசு முடிவு செய்துள்ளது.
அல்கோ டிரேடிங் வழக்கு: NSE, சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு விரட்டி, விரட்டி அபராதம் விதித்த செபி(SEBI)
இது தொடர்பாக சீனாவின் துணைப் பிரதமர் லூ ஹி மற்றும் அமெரிக்காவின் நிதித்துறை அமைச்சர் ஜேனட் யேலன் இருவரும் காணொலி மூலம் இன்று பேச்சு நடத்துகிறார்கள். இந்தப் பேச்சுக்குப்பின், சீனா மீதான கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தும் எனத் தெரிகிறது.
இந்தத் தகவலால் ஹாங்காங், ஷாங்காய், டோக்கியோ, சியோல், தைப்பே பங்குச் சந்தைகள் காலை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.
இரு நாடுகளின் தலைவர்களின் பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க நிதித்துறை வெளியிட்ட அறிவிப்பில், “ சீனாவின் துணைப் பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சீன அரசு கடைபிடிக்கும் நியாயமற்ற, சந்தைக்கு அப்பாற்பட்ட பொருளாதாரக் கொள்கைகள் குறித்தும், உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் குறித்தும் ஜேனட் ஏலன் கவலைகளைத் தெரிவித்தார்
இரு நாடுகளின் தலைவர்களும், சர்வதேச பொருளாதாரக் கண்ணோட்டம், கமாடிட்டி பொருட்கள் விலை உயர்வு, உணவுப்பாதுகாப்பு ஆகியவை குறித்து ஆலோசித்தனர்” எனத் தெரிவிக்கப்பட்டது.
பெட்ரோல், டீசலுக்கு ஏற்றுமதி வரி: ரிலையன்ஸ், வேதாந்தாவுக்கு செக் வைத்த மத்திய அரசு
சீன வர்த்தகத்துறை அமைச்சகம் கூறுகையில் “ அமெரிக்க நிதிஅமைச்சருடனான பேச்சுவார்த்தையில், சீனா நிறுவனங்கள் மீதும், பொருட்கள் மீதும்அமெரிக்கா விதித்துள்ள தடைகள், வரிகள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.
சர்வதேச பொருளாதாரம் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது. ஆதலால், இந்த நேரத்தில் அமெரி்க்கா, சீனா ஆகிய நாடுகள், பொருளாதார உறவில் நட்புணர்வுடன், கூட்டுறவுடன் செயல்பட்டு, வலிமைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. உலகளாவிய சப்ளை சங்கிலியையும், தொழிற்துறை சங்கிலியையும் பாதுகாப்பது என்பது சீனாவுக்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்கும் , உலக நாடுகளுக்கும் நல்லது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தபேச்சுவார்த்தையின் மூலம் சீனா நிறுவனங்கள், பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடுமையான வரிகளைக் குறைக்கும் எனத் தெரிகிறது.