itc share: 3 ஆண்டுகளில் இல்லாத அளவு ஐடிசி பங்குகள்விலை உயர்வு: 10% அதிகரிப்பு: பங்குகளை விற்கலாமா?

By Pothy Raj  |  First Published Jul 5, 2022, 10:59 AM IST

ஐடிசி நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு கடந்த 3 ஆண்டுகளில் இ்ல்லாத அளவு நேற்றைய பங்குவர்த்தகத்தின்போது 3 சதவீதம் உயர்ந்து, ரூ.293 ஆக அதிகரித்தது. கடந்த 2 நாட்களில் 7 சதவீதம் மதிப்பு உயர்ந்துள்ளது. 


ஐடிசி நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு கடந்த 3 ஆண்டுகளில் இ்ல்லாத அளவு நேற்றைய பங்குவர்த்தகத்தின்போது 3 சதவீதம் உயர்ந்து, ரூ.293 ஆக அதிகரித்தது.  கடந்த 2 நாட்களில் 7 சதவீதம் மதிப்பு உயர்ந்துள்ளது. 

2-வது அதிகபட்ச சாதனை வசூல்: ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 56% அதிகரிப்பு

Tap to resize

Latest Videos

கடந்த 2019ம் ஆண்டு மே மாதத்துக்குப்பின், 2 வர்த்தக தினங்களில் ஐடிசி பங்கு மதிப்பு 7 சதவீதம் உயர்ந்துள்ளது. இது 3 ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும். அதுமட்டுமல்லாமல் கடந்த 6 நாட்களில் ஐடிசி பங்குகள் மதிப்பு 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த 6 மாதங்களில் மும்பைப் பங்குச்சந்தையிலும், தேசியப் பங்குச்சந்தையிலும் சிறப்பாகச் செயல்பட்ட நிறுவனப் பங்காகும். கடந்த 6 மாதங்களில் 11சதவீதம் சரிவைச்சந்தித்தாலும், 33சதவீதம் பங்கு மதிப்பு உயர்ந்துள்ளது. 

கடந்த 2020 மார்ச் மாதத்தில் ஐடிசி பங்கு மதிப்பு ரூ.134.95 ஆக இருந்தது. அதிலிருந்து இப்போதுவரை 117 சதவீதம் உயர்ந்துள்ளது. உச்சகட்டமாக கடந்த 2017ம் ஆண்டு ஜூலை3ம் தேதி ரூ.353 ஆக அதிகரித்தது. 2022ம் ஆண்டில் மட்டும் ஐடிசி பங்கு மதிப்பு 33 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. 

பெட்ரோல், டீசலுக்கு ஏற்றுமதி வரி: ரிலையன்ஸ், வேதாந்தாவுக்கு செக் வைத்த மத்திய அரசு

சிகரெட் மீதான வரி கடந்த சில ஆண்டுகளாக நிலையாக இருந்து வருவது, ஐடிசி விலையை உயர்த்துவதற்கும் வசதியாக இருந்தது. 2022, ஜனவரி முதல் மார்ச் வரையிலான கடந்த நிதியாண்டின் கடைசிக்காலாண்டில் ஐடிசி நிறுவனம் சிகரெட் விற்பனையில் 9% வளர்ச்சி அடைந்திருந்தது. கொரோனா தொற்றுக்கு முன்பு இருந்த சிகரெட் விற்பனையை மீண்டும் ஐடிசி எட்டியது. பொருளாதார சூழல் இயல்புக்குத் திரும்பி வருவது, வரிவிகிதத்தில் மாற்றமின்மை போன்றவைதான் சிகரெட் விற்பனை அதிகரிப்புக்குக் காரணமாகும். 

பங்குகளை விற்கலாமா

சந்தை வல்லுநர்கள் கூறுகையில் “ எப்எம்சிஜி பொருட்களுக்கும், துறைக்கும் சந்தையில் இனிவரும் மாதங்களில் நல்ல தேவை இருக்கும். இதனால் ஐடிசி நிறுவனத்தின் லாபம் இருமடங்காகவும் வாய்ப்புள்ளது. ஆதலால், ஐடிசி பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் அவசரப்பட்டு விற்பனை செய்யாமல், சிறிது பொறுத்திருந்து விற்கலாம். ஐடிசி பங்கு விலை ஒரு பங்கு ரூ.310 வரை செல்வதற்கான வாய்ப்புஉள்ளது.ஆதலால், முதலீட்டாளர்கள் பொறுத்திருந்து விற்கலாம்” எனத் தெரிவித்துள்ளனர். 

தங்கத்துக்கான இறக்குமதி வரி 5 % அதிகரி்ப்பு: காரணம் என்ன? தங்கக்கடத்தல் அதிகரிக்கும்?

இதனிடையே இன்னும் சில முதலீட்டாளர்கள் ஐடிசி பங்கு விலை அடுத்துவரும் மாதங்களி்ல் ஒரு பங்கு ரூ.335 வரை உயரும் என்று கணிக்கிறார்கள். இதனால், ஐடிசி பங்கிற்கு வரும்காலங்களில் கடும் கிராக்கி ஏற்படும்.

click me!