கோடக் மகிந்திரா வங்கி, இன்டஸ்இன்ட் வங்கி ஆகியவை விதிகளை கேஒய்சி விதிகளைக் கடைபிடிக்காததையடுத்து, கடும் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
கோடக் மகிந்திரா வங்கி, இன்டஸ்இன்ட் வங்கி ஆகியவை விதிகளை கேஒய்சி விதிகளைக் கடைபிடிக்காததையடுத்து, கடும் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
itc share: கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவு ஐடிசி பங்குகள்விலை உயர்வு: 6 நாட்களில் 10% அதிகரிப்பு
கோடக் மகிந்திரா வங்கிக்கு ரூ.1.05 கோடியும், இன்டஸ்இன்ட் வங்கிக்கு ரூ.ஒரு கோடியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோடக் மகிந்திரா வங்கி வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு விதிகள், கடன்பாதுகாப்பு விதிகள் எதையும் கடைபிடிக்காதது ரிசர்வ் வங்கி ஆய்வில் தெரியவந்தது. குறிப்பிட்ட காலத்திற்குள் டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு தகுதியான தொகையை வரவு வைக்க கோடக் மகிந்திரா வங்கி தவறிவிட்டது.
அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர் அறிவித்த நாளிலிருந்து 10 வேலை நாட்களுக்குள், அங்கீகரிக்கப்படாத மின்னணு பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ள தொகையை வாடிக்கையாளர்களின் கணக்கில் வரவு வைக்கவும் வங்கி தவறிவிட்டது. இதையடுத்து, கோடக் மகிந்திரா வங்கிக்கு ரூ.1.05 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
இன்டஸ்இன்ட் வங்கி வாடிக்கையாளர் புதிய கணக்கு திறக்கும்போது, மின்னணு அடிப்படையிலான கேஒய்சி விதிகளைப் பின்பற்றவில்லை, ஒடிபி எண் பாதுகாப்பு முறையையும் பின்பற்றவில்லை. அதுமட்டுமல்லாமல் அடையாளம் தெரியாத தெரியாத நபர்கள் பெயரில்,வைப்பு நிதிக்கணக்குகளும் ரூ.ஒரு லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை வைக்கப்பட்டுள்ளது. இதற்கும் கேஒய்சி விதிகளை முறையாகப் பின்பற்றவில்லை. இதையடுத்து, இன்டஸ்இன்ட் வங்கிக்கு ரூ.ஒரு கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
itr filing: வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்றீங்களா! இந்த 5 விஷயத்தைத் தெரிஞ்சுக்கோங்க
வங்கிகள் முறையாக விதிகளைக் கடைபிடிக்கிறதா என்பது குறித்து ரிசர்வ் வங்கி அடிக்கடி வங்கிகளை ஆய்வு செய்யும் அப்போது, விதிமுறை மீறல்களில் ஈடுபட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். கடந்த மாதம் 24ம் தேதி இந்தியன் ஓவர் சீஸ் வங்கிக்கு ரூ.57.40 லட்சம் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
ஏடிஎம் கார்டு மோசடி, க்ளோனிங் மற்றும் ஸ்கிம்மிங் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தவறிவிட்டதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.