Crude oil price: உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை தீர்க்க உற்பத்தியை அதிகரிப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் முன்வந்ததையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்தது.
உலகளவில் கச்சா எண்ணெய் (Crude oil) தட்டுப்பாட்டை தீர்க்க உற்பத்தியை அதிகரிப்பதாக ஐக்கிய அரபு அமீரகம்(UAE) முன்வந்ததையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்தது.
யுஏஇ ஆதரவு
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால்விதிக்கப்பட்டபொருளாதாரத் தடையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பைச் சரிக்கட்டும் வகையில், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் ஒபேக் நாடுகளின் உறுப்பினர் ஐக்கிய அரபு அமீரகம் முன்வந்ததுள்ளது.
விலை குறைந்தது
இதனால் கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதிக்குப்பின், நேற்று சர்வதேச சந்தையில் Brent கச்சா எண்ணெய் விலைஒரு பேரல் 16.34 டாலர் அல்லது 13.2% குறைந்தது. கச்சா எண்ணெய் விலை பேரல் 111.14 டாலருக்கு விற்பனையாகிறது. அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ்(WTC) கச்சா எண்ணெய் பேரல் 15.44 டாலர் அல்லது 12.5% விலை குறைந்து, 108.70டாலராகச் சரிந்தது. கடந்த ஆண்டு நவம்பருக்குப்பின் அதிகபட்சவிலைக் குறைவாகும்.
விலை உயர்வு
உக்ரைன் மீது ரஷ்யாவின் போர்தொடுப்பால் அந்நாட்டின் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார, நிதித்தடை விதித்தன. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கும் சூழல் ஏற்பட்டதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வந்தது.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு கச்சா எண்ணெய் பேரல் 140 டாலராக அதிகரித்தது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் தலையிட்டு, கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதாக தெரிவித்ததையடுத்து, விலை படிப்படியாகத் குறையத் தொடங்கியது.
உற்பத்தியை அதிகரிக்கிறோம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் நேற்று இரவு ட்விட்டரில்பதிவிட்ட கருத்தில் “ நாங்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கிறோம். ஒபேக் நாடுகளிடம் கூறி உலகின் கச்சா எண்ணெய் தேவையை நிறைவேற்ற உற்பத்தியை அதிகரிக்க கேட்டுக்கொள்வோம்” எனத் தெரிவித்தார்
அமெரிக்க எரிசக்தித்துறை அமைச்சர் ஜெனிபர் கிரான்ஹோம் நேற்று விடுத்த வேண்டுகோளில், “ உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தியைமுடிந்தால் அதிகரியுங்கள். இந்த நேரத்தில் அதிகமான சப்ளே தேவை. தேவையை நிறைவேற்ற கச்சா எண்ணெயும், எரிவாயும் அவசியம் ” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட 5 நாடுகள் உள்ள ஒபேக் நாடுகளின் கூட்டமைப்பு கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளன.
80 லட்சம் பேரல்கள்
ஒபேக் நாடுகள் தற்போது தினசரி 4 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்து வருகின்றன. இந்த உற்பத்தியை ஒரு மடங்காக 8 லட்சம் பேரல்களாக உயர்த்தினால்தான் ஓரளவுக்கு தேவையா சரிக்கட்ட முடியும். ரஷ்யாவைப் பொறுத்தவரை உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் 3-வது மிகப்பெரிய நாடு. ஐரோப்பியநாடுகள், அமெரிக்காவின் தேவையில், 60 சதவீதத்தை நிறைவேற்றி வந்தது. தினசரி 70 லட்சம் பேரல் கச்சா எண்ணெயே ரஷ்யா உற்பத்தி செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.