சிகரெட், பான்மசாலாவிற்கு அடிமையானவர்களா நீங்கள் ? விலை  கூடுகிறது கவனம் ....!!

Asianet News Tamil  
Published : Feb 02, 2017, 12:40 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
சிகரெட், பான்மசாலாவிற்கு அடிமையானவர்களா  நீங்கள் ?  விலை  கூடுகிறது  கவனம் ....!!

சுருக்கம்

பட்ஜெட் தாக்கல் :

2017-18-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்  நேற்று தாக்கல் செய்யப்பட்டது.இதனை  தொடர்ந்து   பல்வேறு வகையான  பொருட்களுக்கு வரியும்  விதிக்கப்பட்டது.மேலும்,  ஒவ்வொரு துறைக்கும்  நிதி  ஒதுக்கப்பட்டு பட்ஜெட் தாக்கல்  செய்யப்பட்டது.

வரிவிதிப்பு :

பட்ஜெட்டில் பல்வேறு விதமான பொருட்களுக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.குறிப்பான புகையிலை, பான் மசாலா பொருட்களுக்கு கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

பான்  மசாலா  வரி :

பான்மசாலா பொருட்களுக்கு கலால் வரி 6 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இத மூலம்,  இதனுடைய விலை  அதிகரிக்க  அதிக வாய்ப்பு  உள்ளது. அதேப்போன்று புகையிலைக்கு கலால் வரி 4.2 சதவீதத்தில் இருந்து 8.3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல்  வரி :

புகையிலை கலந்த பான் மசாலாவாக இருந்தால் அதற்கான கலால் வரி 10 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.மேலும், இதேப்போன்று பில்டர் அல்லாத சிகரெட்டுகள் 65 மிமீ-க்குள் இருந்தால், ஆயிரம் சிகரெட்டுகளுக்கு ரூ.311 கலால் வரி விதிக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது ரூ.215-ஆக இருந்தது என்பது  குறிப்பிடத்தக்கது. சுருட்டு மற்றும் பீடிக்கான கலால் வரியும் சிறிது உயர்ந்துள்ளது.

1000 சுருட்டு :

1000 சுருட்டு அல்லது பீடிக்கான கலால் வரி இனிமேல் 12.5 சதவீதம் அல்லது ரூ.4,006, இதில் எது அதிகமோ, அந்த வரி விதிக்கப்படும் என்றும், முன்னதாக இது 12.5 சதவீதம் அல்லது ரூ.3,755-ஆக இருந்தது என்பது  குறிப்பிடத்தக்கது.  

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

OYO, GPay Business வாடிக்கையாளர்களே உஷார்.. இதை உடனே தெரிஞ்சுக்கோங்க!
2026-ல் இதெல்லாம் நடக்கும்? பாபா வாங்கா கொடுத்த மிகப்பெரிய எச்சரிக்கை