பச்சை நிறத்திற்கு  மாறிய   இந்திய  பங்குச்சந்தை ......!

First Published Feb 1, 2017, 7:21 PM IST
Highlights


மத்திய பட்ஜெட் அறிவிப்புகளை தொடர்ந்து,  இந்திய பங்குச்சந்தைகள், மூன்று மாதம் கழித்து இன்று தான் உயர்வுடன் முடிந்துள்ளது. 

பட்ஜெட் குறித்த  எதிர்பார்ப்பு :


         2017-18 ஆம் ஆண்டுக்கான,   மத்திய பட்ஜெட்டில்  எந்தெந்த  அறிவிப்புகள்  வெளியாக  போகிறதோ என்ற  எதிர்பார்ப்பு பு கடந்த சில நாட்களாகவே, பங்குச்சந்தை முதலீட்டாளர்களிடம்   இருந்தது.  

இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பெரிய அளவில் வரி விதிப்பு ஏதும் செய்யப்படவில்லை என்றும், நாட்டின் பொருளாதாரம், வர்த்தகப் பற்றாக்குறை போன்றவை கட்டுக்குள்  உள்ளதாக  தெரிவித்தார்.

இதன் விளைவாக , பங்குச்சந்தைகளில் முதலீடு அதிகரிக்கவே, முன்னணி நிறுவனப் பங்குகளின்  விலை மட்டுமின்றி, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனப்  பங்குகளின் விளையும் உயர்ந்தது.

சென்செக்ஸ் / நிப்டி :

வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 486 புள்ளிகள் அதிகரித்து, 28,142 புள்ளிகளாக நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 155 புள்ளிகள் உயர்ந்து, 8,716 புள்ளிகளாக முடிந்தது.


மும்பை பங்குச்சந்தை பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனப் பங்குகளில், 1,920 பங்குகள் விலை உயர்ந்தும், 901 பங்குகள் விலை குறைந்தும் முடிந்தன என்பது  குறிப்பிடத்தக்கது.

click me!