gold rate today: தங்கம் விலை விர்ர்ர்ர்! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா!: இன்றைய நிலவரம் என்ன?

Published : Aug 02, 2022, 10:32 AM ISTUpdated : Aug 02, 2022, 10:40 AM IST
gold rate today: தங்கம் விலை விர்ர்ர்ர்! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா!: இன்றைய நிலவரம் என்ன?

சுருக்கம்

தங்கத்தின் விலை வாரத்தின் முதல்நாளான நேற்று குறைந்திருந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. 

தங்கத்தின் விலை வாரத்தின் முதல்நாளான நேற்று குறைந்திருந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. 

 சென்னையில் இன்று காலை நிலவரப்படி,  தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 25ரூபாயும், சவரணுக்கு 200 ரூபாயும் அதிகரித்துள்ளது.  

itr filing date:ஐடி ரிட்டன் தாக்கலுக்கு கடைசி தேதியை தவறவிட்டாச்சா?அடுத்து என்ன செய்வது? சட்ட நடவடிக்கை வருமா?

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,795க்கும், சவரன் ரூ.38,360க்கும் விற்பனை ஆனது. இன்று காலை தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது. 

இதன்படி, சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் சரிந்து ரூ4,820ஆகவும், சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.38,560க்கும் விற்கப்படுகிறது.

july gst collection: ஜூலை ஜிஎஸ்டி வரி வசூல் 28% அதிகரிப்பு: தொடர்ந்து 5-வது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடி

கோவை, திருச்சி, வேலூரில்  தங்கம் கிராம் ரூ.4820ஆக விற்கப்படுகிறது. 

கடந்த வாரம் முழுவதும் உயர்ந்திருந்த தங்கம் விலை வாரத்தின் முதல்நாளான நேற்று திடீரெனக் குறைந்தது. ஆனால் இன்று சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. 

தங்கம் விலை இனிமேல் படிப்படியாக அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை தீவிரமாக  உயர்த்தும் நோக்கம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

 இதனால், டாலர் மீதான முதலீடு, ஆர்வம் குறைந்து,தங்கத்தின் பக்கம் திரும்பலாம். இதன் காரணமாக வரும் நாட்களில் தங்கத்தின் விலை படிப்படியாக உயரக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது

itr filing date: ஜூலை 31, கடைசிநாளில் 63.47 லட்சம் பேர் ஐடி ரிட்டன் தாக்கல்

வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 30 பைசா அதிகரித்து, ரூ.63.60 ஆகவும், கிலோவுக்கு ரூ.300 அதிகரித்து, ரூ.63,600க்கும் விற்கப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Gold Rate Today (December 06): இதுதான் இன்றைய தங்கம் விலை.! விலை உயர என்ன காரணம் தெரியுமா?