5ஜி அலைக்கற்றை ஏலம் முடிந்தது: எதிர்பார்த்தது 4.3 லட்சம் கோடி... கிடைத்தது 1.5 லட்சம் கோடிதான்!!

Published : Aug 01, 2022, 03:41 PM ISTUpdated : Aug 01, 2022, 11:05 PM IST
5ஜி அலைக்கற்றை ஏலம் முடிந்தது: எதிர்பார்த்தது 4.3 லட்சம் கோடி... கிடைத்தது 1.5 லட்சம் கோடிதான்!!

சுருக்கம்

5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த 7 நாட்களாக நடந்து வந்த நிலையில், இன்று முடிந்தது. இதுவரை ரூ.1.50 லட்சம் கோடிக்கு அதிகமாக அலைக்கற்றை விற்பனையாகியுள்ளது என பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன.

5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த 7 நாட்களாக நடந்து வந்த நிலையில், இன்று முடிந்தது. இதுவரை ரூ.1.50 லட்சம் கோடிக்கு அதிகமாக அலைக்கற்றை விற்பனையாகியுள்ளது என பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்னும் விற்பனை தொகை முழுமையாக அறிவிக்கப்படாத நிலையில், ரூ.1,50,173 லட்சம் கோடிக்கு ஏலம் போயுள்ளதாக செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

ஜூலை ஜிஎஸ்டி வரி வசூல் 28% அதிகரிப்பு: தொடர்ந்து 5-வது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடி

கடந்த மாதம் 26ம் தேதி 5ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கியது. 72ஆயிரம் மெகாஹெட்ஸ் கீழ் 9 விதமான பேண்ட்கள் ஏலம் விடப்பட்டன. இதன் காலம் 20 ஆண்டுகளாகும். அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, சுனில் பார்தி மிட்டலின் ஏர்டெல், கவுதம் அதானி,வோடபோன்ஐடியா இடையே கடும் போட்டி நிலவியது.

கடந்த 2016, 2021ம் ஆண்டில் 700 மெகாஹெட்ஸ் அலைவரிசையை வாங்க யாருமில்லை இந்த ஆண்டு ஏலத்தில் இதற்கு கடும போட்டி நிலவியிது. 

itr filing date: ஜூலை 31, கடைசிநாளில் 63.47 லட்சம் பேர் ஐடி ரிட்டன் தாக்கல்

கடந்த 6 நாட்கள் ஏலத்தில் ரூ.1,50,130 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டிருந்தது. இன்று 7-வது நாள் ஏலமும், 38-வது சுற்றும் நடந்தது இதில் இறுதியாக ரூ.150,163 லட்சம் கோடிக்கு ஏலம் முடிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு மொத்தமாக 72 ஜிகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகள் சுமார் 4.3 லட்சம் கோடிக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 1.5 லட்சம் கோடிக்கு மட்டுமே ஏலம் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.

4ஜி சேவைக்கு பயன்படுத்தப்படும் 1800மெகாஹெட்ஸுக்கு, உ.பியின் கிழக்குப்பகுதியில் உள்ள லக்னோ, அலகாபாத், வாரணாசி, கோரக்பூர், கான்பூரில் கடும் கிராக்கிஇருந்தது. இங்கு மட்டும ஒரு கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்  என்பதால் இந்த சந்தையைப் பிடிக்க ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் இடையே கடும் போட்டி இருந்தது. உ.பி. கிழக்கு சந்தை மட்டும் ரூ.160 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டது. இது ரிசர்வ் தொகையில் ரூ.91 கோடியாகத்தான இருந்தது. 

இலங்கை அரசுக்கு எந்தவிதமான புதிய நிதி உதவி கிடையாது: உலக வங்கி கைவிரிப்பு

உ.பி கிழக்குப்பகுதியில் ரிலையன்ஸ் ஜியோ 3.29 கோடி சந்தாதாரர்களையும், ஏர்டெல் 3.70 கோடி, வோடவோன் ஐடியா 2.02 கோடி சந்தாதாரர்களையும் வைத்துள்ளன

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக இந்தியா வளர 30 ஆண்டுகள் ஆகலாம்: ரகுராம் ராஜன்
IndiGo: 10,000 கார்கள், 9,500 ஹோட்டல் அறைகள், ரூ.827 கோடி ரீஃபண்ட்... மீண்டும் மீண்டு வந்த இண்டிகோ!