உலக பெரும்பணக்காரர் வாரன் பஃபெட்டின் நீண்டகால வணிக பார்ட்னர் சார்லி முங்கர் காலமானார்..

Published : Nov 29, 2023, 08:20 AM ISTUpdated : Nov 29, 2023, 08:28 AM IST
உலக பெரும்பணக்காரர் வாரன் பஃபெட்டின் நீண்டகால வணிக பார்ட்னர் சார்லி முங்கர் காலமானார்..

சுருக்கம்

உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமான வாரன் பஃபெட்டின் நீண்டகால நண்பரும் வணிகப் பங்காளியுமான சார்லி முங்கர், நேற்று காலமானார்.

பிரபல அமெரிக்க முதலீட்டாளரும், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமான வாரன் பஃபெட்டின் நீண்டகால நண்பரும் வணிகப் பங்காளியுமான சார்லி முங்கர், நேற்று காலமானார். அவருக்கு வயது 99. வாரன் பஃபெட்டின்  பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் துணை தலைவராக பல தசாப்தங்களாக பணியாற்றிய சார்லி முங்கர் கலிபோர்னியா மருத்துவமனையில் நிம்மதியாக இறந்தார்" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது..

அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள வாரன் பஃபெட் "சார்லியின் உத்வேகம், ஞானம் மற்றும் பங்கேற்பு இல்லாமல் பெர்க்ஷயர் ஹாத்வே தற்போதைய நிலைக்கு கட்டமைக்கப்பட்டிருக்க முடியாது" என்று புகழஞ்சலி சூட்டி உள்ளார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பஃபெட்டைப் போலவே, சார்லி முங்கர் நெப்ராஸ்காவின் ஒமாஹாவில் பிறந்து வளர்ந்தார். 1959 இல் சந்தித்தத இருவரும், 60 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருந்து வந்தனர்.

சார்லி முங்கர் 1978 இல் பெர்க்ஷயர் ஹாத்வேயில் துணைத் தலைவராக சேர்ந்தார், ஒரு சிறிய ஜவுளி நிறுவனத்தில் இருந்து ஒரு பிரம்மாண்டமான நிறுவனமாக மாற்ற அவர் உதவினார், அந்நிறுவனத்திற்கு இப்போது 780 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பு உள்ளது.

எனினும் வாரன் பஃபெட்டின் பெரும் செல்வத்தைப் போலன்றி, சார்லி முங்கரின் சொத்து மதிப்பு மிகவும் சாதாரணமான $2.6 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது, இருப்பினும் அவர் தனது வாழ்நாளில் தனது செல்வத்தின் பெரும்பகுதியை தொண்டுக்காக நன்கொடையாக அளித்துள்ளார்.

சார்லி முங்கர் பெர்க்ஷயர் ஹாத்வேயில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறவில்லை, ஜனவரி 1, 2024 அன்று 100 வயதை எட்டவிருந்த நிலையில் அவரின் இறப்பு செய்தி வந்துள்ளது.. அவரின் மறைவுக்கு பல்வேறு முதலீட்டாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கிம் ஜாங் உன் நாட்டில் தலைவிரித்தாடும் புதிய பிரச்சனை.. சோகத்தில் வடகொரியா மக்கள்!

2017 ஆம் ஆண்டு வாரன் பஃபெட் அளித்த நேர்காணலில் முதலீடு குறித்த தனது எண்ணங்களை மாற்றிய சார்லி முங்கருக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய அவர் “ "தரமான நிறுவனங்களைத் தேடுவது மற்றும் ஐந்து அல்லது 10 அல்லது 20 ஆண்டுகளுக்குச் செயல்படக்கூடிய முதலீட்டைச் செய்வதற்கான திறனைக் கருத்தில் கொண்டு, அவர் அவற்றை ஒரு பெரிய வழியில் செம்மைப்படுத்தினார். 

சார்லி முங்கர் திடமான மனம் கொண்டவர், நான் திடமான எண்ணம் கொண்டவர். அந்த முழு நேரத்திலும் நாங்கள் ஒருபோதும் தகராறு செய்ததில்லை, நாங்கள் ஒருபோதும் செய்ய மாட்டோம். சார்லியுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் வேடிக்கையாக இருந்தது," என்று அவர் மேலும் கூறினார்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!