இனி UPI மூலம் ரூ.2000-க்கு மேல் அனுப்ப முடியாது... புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு..

Published : Nov 28, 2023, 01:16 PM IST
இனி UPI மூலம் ரூ.2000-க்கு மேல் அனுப்ப முடியாது... புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு..

சுருக்கம்

ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் வகையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதிகரித்து வரும் ஆன்லைன் பேமெண்ட் மோசடிகளை தடுக்க, இரண்டு நபர்களுக்கு இடையே முதல் முறையாக நடக்கும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு அதிகமான பரிவர்த்தனைக்கு குறைந்தபட்ச நேரத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதாவது முதல்முறையாக 2 நபர்கள் டிஜிட்டல் பேமெண்ட் முறையில் பண பரிவர்த்தனி மேற்கொள்ளும் போது அவர்கள் ரூ.2000 வரை பணம் அனுப்ப முடியும். ரூ.2,000-க்கும் மேல் பணம் அனுப்ப வேண்டும் எனில் 4 மணி நேரம் காத்திருக்க வேண்டும். ரூ.2000-க்கும் உள்ள அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் 4 மணி நேரம் கால இடைவெளி இருக்கும். 

இந்த செயல்முறை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் சில சிக்கல்களை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இணையப் பாதுகாப்புக் கவலைகளைத் தணிக்க வேண்டியது அவசியம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். இந்த நடவடிக்கை இறுதி செய்யப்பட்டால், உடனடி கட்டணச் சேவை (IMPS), ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட் (RTGS) மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டண இடைமுகம் (UPI) ஆகியவற்றின் மூலம் பரந்த அளவிலான டிஜிட்டல் பேமெண்ட்டுகளை உள்ளடக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

உதாரணமாக, தற்போது, ஒரு பயனர் புதிய UPI கணக்கை உருவாக்கும் போது, முதல் 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ரூ.5,000 அனுப்ப முடியும். இதேபோல், தேசிய மின்னணு நிதி பரிமாற்றத்தில் (NEFT), பயனாளியின் செயல்பாட்டிற்குப் பிறகு, முதல் 24 மணி நேரத்தில் ரூ. 50,000 (முழு அல்லது பகுதிகளாக) மாற்றப்படலாம்.

ஆனால், தற்போதைய புதிய திட்டத்தின்படி, ஒரு பயனர் இதுவரை பரிவர்த்தனை செய்யாத மற்றொரு பயனருக்கு ரூ. 2,000க்கு மேல் முதல் கட்டணம் செலுத்தும் ஒவ்வொரு முறையும் 4 மணிநேர கால வரம்பு பொருந்தும். “ரூ. 2,000க்கு மேல் முதல் முறை டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 4 மணிநேர கால வரம்பைச் சேர்க்க இருக்கிறோம். இந்திய ரிசர்வ் வங்கி, பல்வேறு பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் மற்றும் கூகுள் மற்றும் ரேஸர்பே போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் தொழில்துறை பங்குதாரர்களுடன் செவ்வாய்கிழமை நடைபெறும் சந்திப்பின் போது இதுகுறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இது எப்படிச் செயல்படும் என்றால், முதல் முறையாக ஒருவருக்குப் பணம் செலுத்திய பிறகு, கட்டணத்தைத் திரும்பப் பெற அல்லது மாற்றியமைக்க உங்களுக்கு 4 மணிநேரம் இருக்கும்." என்று பெயர் வெளியிட விரும்பாத அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த மாதிரி SMS வந்தா நம்பாதீங்க.. உங்க வங்கிக்கணக்கு காலியாகலாம்... சென்னை காவல்துறை எச்சரிக்கை..

2022-23 நிதியாண்டில் டிஜிட்டல் பேமெண்ட் பிரிவில் வங்கிகள் அதிகபட்ச மோசடிகளைக் கண்டுள்ளன என்று ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 2023 நிதியாண்டில்,  வங்கியில் மொத்த மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 13,530 ஆக இருந்தது, அதாவது மொத்தம் ரூ.30,252 கோடி மோசடி நடந்துள்ளது. இதில், கிட்டத்தட்ட 49 சதவீதம் அல்லது 6,659 வழக்குகள் டிஜிட்டல் பேமெண்ட் - கார்டு/இன்டர்நெட் - வகையைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்