ஒரே ஒரு ஜூம் வீடியோ கால்... 3 நிமிடங்களில் 900 ஊழியர்களின் வேலை காலி..!

Published : Dec 07, 2021, 12:37 PM IST
ஒரே ஒரு ஜூம் வீடியோ கால்... 3 நிமிடங்களில் 900 ஊழியர்களின் வேலை காலி..!

சுருக்கம்

 குறைந்தது 250 ஊழியர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள். அதே நேரத்தில் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் செய்ய வேண்டும். 

ஒரே ஒரு ஜூம் வீடியோ காலில் ஆன்லைன் அடமானக் கடன் வழங்கும் Better.com இன் CEO விஷால் கர்க், தனது நிறுவனத்தின் 900 ஊழியர்களை பணிநீக்கம் செய்தார்.

தனது நிறுவன ஊழியர்களை ஜூம் காலில் அழைத்த விஷால் கார்க்,  அந்த வீடியோ காலில், ’’தனது ஊழியர்கள் கேட்க விரும்பும் செய்தி இதுவல்ல. இந்த அழைப்பில் இருப்பவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். சந்தை மாறிவிட்டது, கடுமையான நடவடிக்கைகள் தேவை.

 

 குறைந்தது 250 ஊழியர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள். அதே நேரத்தில் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் செய்ய வேண்டும். செலவுக்கு பணம் கொடுக்கும் வாடிக்கையாளர்களிடம் கொள்ளையடித்து வருகின்றனர். உங்களுக்கே தெரியும் என்று? ஊழியர்களை பணிநீக்கம் செய்வது எனக்கு கடினமாக உள்ளது. 

முன்பு ஒரு ஜூம் அழைப்பில் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது எனக்கு கடினமாக இருந்தது. அப்போது நான் அழுதேன். ஆனால் இந்தமுறை நான் அழமாட்டேன். வலிமையுடன் இருப்பேன். எனது வாழ்க்கையில் இதை இரண்டாவது முறையாக செய்துள்ளேன்’’ என அவர் தெரிவித்தார். 

ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கு சந்தை, செயல்திறன்,உற்பத்தித்திறன் உள்ளிட்ட பல காரணங்களை கார்க் மேற்கோள் காட்டினார். நிறுவனம் நான்கு வாரங்களுக்கு முன்பு ஊழியர்களின் உற்பத்தித்திறன் புள்ளிவிவரங்களை மதிப்பீடு செய்யத் தொடங்கியது.

எஞ்சியிருக்கும் ஊழியர்களின் செயல்திறன் உன்னிப்பாக ஆராயப்படும் என்றும் கார்க் எச்சரித்துள்ளார். தலைமை நிர்வாக அதிகாரியின் தொனி மிகவும் ஆக்ரோஷமாகவும் மிரட்டுவதாகவும் இருப்பதாக ஒரு ஊழியர் குற்றம்சாட்டியுள்ளார்.

‘’இது வினோதமானது மற்றும் கவலையளிக்கிறது என்று ஊழியர் ஒருவர் கூறினார். கார்க் ஊழியர்களை அச்சுறுத்தவில்லை என்று மறுக்கிறார். இருப்பினும், உற்பத்தித்திறன் அளவீடுகளில் நிறுவனம் அதிக கவனம் செலுத்துகிறது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு மற்றும் முதலீட்டாளர்கள், கார்க்கின் கூற்றுப்படி, பணிநீக்கங்களுக்கும் அவை கையாளப்பட்ட விதத்திற்கும் முற்றிலும் ஆதரவாக இருந்தனர்.

இந்நிறுவனம் தற்போது $7 பில்லியன் டாலர் மதிப்பில் உள்ளது. கொரோனா தொற்றின்போது ஆயிரக்கணக்கான புதிய வாடிக்கையாளர்கள் கடனைப் பெறுவதற்கான விரைவான வழிகளைத் தேடுகிறார்கள், சில நிமிடங்களில் அடமானத்திற்கு முன் அனுமதி வழங்குகிறது Better.com.  இந்த வலைதளத்தில் புரோக்கர் கட்டணமின்றி நிலம், வீடு வாங்க கடன் வசதி பெறலாம். ரியல் எஸ்டேட் துறையின் அனைத்து பிரிவிலும் வெளிப்படைத் தன்மை இருந்ததால் அந்த நிறுவனம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் விஷால் கார்க் இந்திய வம்சாவளியை சார்ந்தவர். 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

SBI to Hire: ஸ்டேட் பேங்கில் செம்ம வேலை வாய்ப்பு... ஒவ்வொரு காலாண்டுக்கும் 16000 பேருக்கு வேலை..! 300 புதிய கிளை திறக்கப்படும்.!
AI City Rising: பாலைவனத்தில் உருவாகும் பிரமாண்ட "ஏஐ" தொழில் நகரம்.! அரபு நாடுகளில் உருவாகிறதா "போட்டி" சிலிகன் வேலி?!